மும்பை: சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து, அவர்களை தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதாக காட்சிகள் இடம்பெற்றன. அதா சர்மா, சித்தி இத்னானி உள்பட பலர் நடித்த இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் படம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் 2ம் பாகம் உருவாக இருப்பதாகவும், கேரளாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர் களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து சுதிப்டோ சென் கூறுகையில், ‘இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது என்பது உண்மை. தற்போது அதன் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. இதற்கும், ஹேமா கமிட்டி அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார். 2ம் பாகத்திலும் அதா சர்மா நடிக்கஇருக்கிறார்.