தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் தனக்கு அட்வைஸ் செய்தது குறித்து அபிஷேக் பச்சன் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘எல்லோரையும் போலவே நானும் எதிர்மறை விமர்சனங்களில் கவனம் செலுத்தினேன். என்னை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்கவும், திருப்திப்படுத்தவும் விரும்பினேன். அப்போது என் மனைவி ஐஸ்வர்யா ராய், `எதிர்மறை விமர்சனங்கள் என்பது, ஒரு வாத்து நீந்திச் செல்லும்போது, அதன் முதுகுபுறம் இருக்கும் தண்ணீர் போன்றது. நீங்கள் ஏன் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள்? நேர்மறையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்’ என்று அட்வைஸ் செய்தார்.
சில நேரங்களில் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சியாகும். எனவே, மகிழ்ச்சியை தொலைக்கும் லட்சியவாதியாக இருக்காதீர்கள். என்னால் எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அறிந்திருக்கிறேன். சமீபத்தில் எனக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் விவாகரத்து நடக்க இருப்பதாக வெளியான செய்திகளை கேள்விப்பட்டபோது மனசு வலித்தது’ என்றார். ஐஸ்வர்யா ராய் சொன்ன அட்வைஸை இதுநாள்வரை கடைப்பிடிக்கிறாரா என்பது பற்றி அபிஷேக் பச்சன் பேசவில்லை.