சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், மம்தா மோகன்தாஸ், ரகுல் பிரீத் சிங், வம்சி கிருஷ்ணா நடித்த ‘தடையறத் தாக்க’ என்ற படம், கடந்த 2012 ஜூன் 1ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்றது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்திருந்தார். ஆக்ஷனிலும் மற்றும் நடிப்பிலும் அருண் விஜய்க்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரில் லர் ஜானரில் உருவான இப்படத்தை அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், வரும் 27ம் தேதி வெளியிடுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் படம் புதுப்பிக் கப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்பு டன், புதிய டிஜிட்டல் பதிப்பாக திரையிடப் படுகிறது.
107