துபாய்: துபாயில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து கார் ரேஸ்களில் பங்கேற்க இருப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை சினிமா பக்கம் போகாமல் இருக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். அதன்படி அவரது புதிய படம் செப்டம்பருக்கு பின்பே தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் பைக் பயணத்தையும் அவர் ஏப்ரலில் தொடங்க இருக்கிறார். ‘விடா முயற்சி’ படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தையும் அஜித் முடித்துவிட்டார்.
43