சென்னை: இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த அஜித், அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே சில சர்வதேச அளவிலான கார் ரேஸ் போட்டிகளில் அஜித் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் 2025 கார் பந்தய தொடரில் அஜித் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.
மீண்டும் கார் ரேஸ்க்கு கம்பேக் கொடுத்துள்ளதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த தகவலை நடிகர் ஜான் கொகைன் மற்றும் கார் ரேஸ் போட்டியாளர் நரேன் கார்த்திகேயன் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து உறுதி செய்துள்ளனர். இந்த கார் பந்தயம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் எனத் தெரிகிறது.