அமலா பாலுக்கு இப்போது புதிய காதல் பிறந்திருக்கிறது. முன்பு தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சுதந்திரத்தை விரும்பும் அமலாவால் கட்டுக்கோப்பான குடும்பத்தில் வாழ முடியவில்லை. அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஏ.எல்.விஜயிடமிருந்து பிரிந்தார். அதன் பிறகு நடிகர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த காதலும் தொடரவில்லை.
பஞ்சாபை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை காதலித்தார். இருவரும் புதுச்சேரியில் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.
பின்னர் சொத்து தகராறால் பிரிந்தனர். தற்போது அமலாவுக்கு புதிய காதல் பிறந்திருக்கிறது. தனது புதிய காதலனாக கோவாவை சேர்ந்த ஜெகத் தேசாய் என்பவரை அண்மையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தற்போது அவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் படம் வைரலாக பரவி வருகிறது. இவருடனாவது மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்குங்கள் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.