சென்னை: வட இந்திய வாலிபருடன் அமலா பாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நடிகை அமலா பால், தமிழ் படங்களில் நடித்தபோது, இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். பிறகு பஞ்சாபை சேர்ந்த பாடகர் ஒருவருடன் லிவிங் டு கெதர் பாணியில் அமலா பால் வாழ்ந்து வந்தார். பின்னர் அவரையும் பிரிந்தார். இந்நிலையில் அவ்வப்போது சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வந்தார்.
தற்போது, வட இந்தியாவை சேர்ந்த ஜெகத் தேசாய் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். ஜெகத் தேசாய், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓட்டல் ஒன்றில் அமலா பாலுடன் சேர்ந்து அவர் நடனமாடுகிறார். பிறகு அமலா பாலுக்கு மோதிரம் அணிவிக்கிறார். இதையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.