சென்னை: பிரசாந்தின் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படம் இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், மற்றும் கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் அந்தகன் திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.