சென்னை: நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்குகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்” என்றார். நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி.ராமாநாயுடுவின் புகழ்பெற்ற ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் துல்கரின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது.
42