சென்னை: மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை தொகுத்து, ‘காந்தி’ என்ற பெயரில் வெப்தொடர் உருவாக்கப்படுகிறது. அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இத்தொடரை பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா இயக்குகிறார். ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகங்களின் அடிப்படையில் இது உருவாகிறது.
காந்தி வேடத்தில் பிரதிக் காந்தி நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘இந்த வெப்தொடரில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்ததன் மூலமாக எங்கள் கனவு நனவாகி இருக்கிறது. கதையின் உணர்வை உயர்த்தும் தனித்துவமான திறனை அவரது இசை கொண்டுள்ளது’ என்று, ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.