சென்னை: சாய் பிலிம் பேக்டரி சார்பில் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், ‘மிரியம்மா’. முதன்மை கேரக்டரில் ரேகா மற்றும் விஜே ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஏ.ஆர்.ரெஹானா இசை அமைத்துள்ளார். மூன் ராக்ஸ் குழுவினர் பின்னணி இசை அமைத்துள்ளனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாடகைத்தாய் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரேகா பேசியது:
தொடர்ந்து 35 வருடங்களாக நடித்து வருவதை நினைக்கும்போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. எனக்கு பணம் பெரிதல்ல. வித்தியாசமான கேரக்டர்கள்தான் பெரிது. 40 வயதானாலே, கறிவேப்பிலை மாதிரி எங்களை தூக்கி எறிந்துவிடுகின்றனர். என் உயிருள்ளவரை நடித்துக்கொண்டே இருப்பேன்.