சென்னை: ஏ அன்ட் பி குரூப்ஸ் தயாரிப்பில் உதய்.கே எழுதி இயக்கியுள்ள படம், ‘அஃகேனம்’. இதில் ‘அன்பிற்கினியாள்’ படத்துக்கு பிறகு மீண்டும் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சீதா, ஷிவ் பிங்க், ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீன் ராஜா, கல்கி நடித்துள்ளனர். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்ய, பரத் வீரராகவன் இசை அமைப்பில் கார்த்திக் நேத்தா, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர். சரவணன், ஏ.கே.சேகர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கீர்த்தி பாண்டியன் கூறியதாவது:
உதய் இயக்கிய ‘யாக்கை திரி’ என்ற குறும் படத்தை பார்த்த பிறகு இப்படத்தில் நடிக்க நான் விரும்பினேன். என் தந்தை அருண் பாண்டியன் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் அவர் எனக்கு வில்லனா என்பது சஸ்பென்ஸ். இந்திரா என்ற கால்டாக்ஸி டிரைவராக நடித்துள்ளேன். டிரைவிங் என்றால் உயிர். நடிக்க வராமல் இருந்திருந்தால், கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன். ‘அஃகேனம்’ டைட்டிலில், ஃ என்பது ஆயுத எழுத்தின் வடிவமாகும். மூன்று புள்ளிகள் என்பது, மூன்று முக்கிய கேரக்டர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை குறிக்கிறது.