மும்பை: இந்திய அளவில் பிரபலமான நாயகிகளில் ஒருவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த இவர் ‘பேமிலி மேன்’ வெப் தொடரின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றார். அதை தொடர்ந்து ‘சிட்டாடல்’ வெப் தொடரில் ஆக்ஷன் நாயகியாக நடித்த அனைவரும் அசரவைத்தார். தொடர்ந்து பாலிவுட்டில் சமந்தாவிற்கு வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொரு என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் படுவைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது சமந்தா ஜாலியாக ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வரும் சமந்தாவின் இந்த வீடியோ, மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று ஷாப்பிங் செல்லும்போது ஆட்டோவில் பயணித்துள்ளார் சமந்தா. அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்தவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மாஸ்க் அணிந்திருக்கும் சமந்தா அதைக் கழற்றி தனது நாக்கை காட்டி பின், ஜாலியாக சிரிக்கிறார்.
72