ஐதராபாத்: தெலுங்கு படவுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணாவின் திரையுலகப் பயணம் கடந்த 1974ல் ‘தாதம்மா கலா’ என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக தொடங்கியது. அவர் தனது தந்தையும், சீனியர் நடிகரும், முன்னாள் ஆந்திர மாநில முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து நடித்துஇருந்தார்.
இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாலகிருஷ்ணாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ‘ஆக்ஷன் கிங், கலெக்ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங்! எனது அருமை அண்ணன் பாலய்யா, சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்து இன்னும் வலுவாக இருக்கிறார். இது ஒரு பெரிய சாதனை! அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு மன அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி அமைய கடவுளை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.