ஐதராபாத்: நந்தமுரி தாரக ராமாராவ் (என்.டி.ராமாராவ்) பேரனும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்ஞ்யா, பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகும் இப்படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்சுடன் இணைந்து எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். எம்.தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.
மோக்ஷக்ஞ்யாவை நடிகராக அறிமுகம் செய்ய பாலகிருஷ்ணாவும், அவரது குடும்பத்தினரும் சரியான கதையையும், பிரபலமான இயக்குனரையும் தேடி வந்தனர். இதையடுத்து பிரசாந்த் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து பிரசாந்த் வர்மா கூறுகையில், ‘மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது என்பது கவுரவம் மட்டுமல்ல, மிகப்பெரிய பொறுப்பும் கூட. என்மீதும், கதையின் மீதும் பாலகிருஷ்ணா வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த ஸ்கிரிப்ட் இதிகாசத்தில் இருந்து ஈர்க்கப்பட்ட கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது’ என்றார்.