சென்னை: 2017ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் குணா பாபு, சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ திரைப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமும் காதலும் நிறைந்த தளபதி பரிதி வேடத்தில் அவரது நடிப்பு, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இளம் நடிகரான குணா பாபு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு தையல்காரரின் மகனாக வளர்ந்தார். தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றிய குணா பாபு, சினிமா மீதான ஆர்வத்தால், தனது பணியைத் துறந்து, தியேட்டர் மற்றும் சினிமா நடிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பெற்றபின், சினிமாவில் அறிமுகமானார். கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா, பஹத் பாசில், வடிவேலு நடிக்கும் மாரீசன், கேங், தடை அடி உடை, மிராஜ் (மலையாளம்) உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
34