மும்பை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்து நல்ல வசூலை குவித்த இந்தி படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாகவே இருந்தது. இதில் ரன்பீர் கபூருடன் இணைந்து எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தவர் இளம் நடிகை திரிப்தி டிம்ரி.இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது. ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான திரிப்தி டிம்ரி, சமீபத்தில் ரூ. 14 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
அனிமல் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பேட் நியூஸ் என்ற இந்தி படத்தில் நடிகை கேத்ரினா கைஃபின் கணவரும் நடிகருமான விக்கி கெளசலுடன் ஜோடிப் போட்டு நடித்துள்ளார். இப்படத்திம் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் திரிப்தி, விக்கி கௌசலின் நெருக்கமான காட்சிகள் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் பேட் நியூஸ் படத்தின் ஜானம் என்ற பாடல் காட்சியின் பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் விக்கி கெளசலுடன் நீச்சல் குள காட்சி, படுக்கையறை மற்றும் பாத்ரூம் காட்சிகளில் ஆபாசமாக நடித்திருக்கிறார் திரிப்தி. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த பாடல் காட்சி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக கமென்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே நிர்வாணமாக நடித்த நிலையில் இப்போது மீண்டும் வரம்பு மீறி திரிப்தி நடித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கமென்ட் செய்து வருகிறார்கள்.