ஐதராபாத்: அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. கடந்த 2018ல் அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘பாகமதி’ என்ற படத்தை ஜி.அசோக் இயக்கியிருந்தார். இதில் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி சர்மா நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்தது. தற்போது இப்படத்தின் 2வது பாகம் உருவாகும் தகவலை ஜி.அசோக் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை விட 2வது பாகத்தில் அனுஷ்காவின் கேரக்டர் வலுவாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஷூட்டிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. தற்போது தெலுங்கில்
‘காட்டி’, மலையாளத்தில் ‘காத்தனார்’ ஆகிய படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதில் ‘காத்தனார்’ படத்தின் மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமாவது குறிப்
பிடத்தக்கது.
34