Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிகினி உடையை வெறுக்கும் காஜல்

நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தில், மண்டோதரி வேடத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். மேலும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்திலும், இந்தியில் ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘எனக்கு பிகினி உடை அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன்.

அதுபோன்ற தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை. படங்களில் அளவுக்கு அதிகமான நெருக்கமான காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கான எல்லையை நானே வகுத்துக்கொண்டேன். அந்த எல்லையை மீறும் காட்சி இருந்தால், அப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று நேரடியாக சொல்லிவிடுவேன். அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எனக்கு கவலை இல்லை. ஒரு நடிகையாக எனக்கென்று ஒரு எல்லையை நான் நிர்ணயித்து வைத்திருக்கிறேன். அந்த கொள்கையில் தொடர்ந்து நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.