ஐதராபாத்: இயக்குனரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது அவர் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம், ‘ராமம் ராகவம்’. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தந்தை வேடத்தில் சமுத்திரக்கனி, அவரது மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். தந்தை, மகன் பாசப் போராட்டத்ைத மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இருந்து ‘கொலசாமி போல’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
சமீபத்தில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிலர் ‘ராமம் ராகவம்’ படத்தைப் பார்த்துவிட்டு சமுத்திரக்கனியையும், தன்ராஜையும் பாராட்டினர். சமூகத்துக்கு அவசியம் தேவைப்படும் கருத்துகளுடன், முழுநீள பேமிலி சென்டிமெண்டுடன் உருவான இப்படத்துக்கு சிவபிரசாத் யானலா கதை எழுதியுள்ளார். விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் திரைக்கு வருகிறது.