பாலிவுட்டில் புகழ்பெற்றால், அடுத்து டோலிவுட்டில் களமிறங்குவது வாடிக்கை. அந்த வரிசையில், இரண்டு முறை உலக அழகி பட்டம் ெவன்ற ஹரியானா பெண் மானுஷி சில்லர், இந்தியில் ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘தி கிரேட் இண்டியன் பேமிலி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘தெஹ்ரான்’, ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ‘ஆபரேஷன் வாலண்டைன்’ என்ற படத்தின் மூலம் அவர் டோலிவுட்டுக்கு வருகிறார். இதில் அவர் வருண் தேஜ் ஜோடியாக நடிக்கிறார். இந்திய விமானப்படையின் பின்னணியில் உருவாகும் இதில் வருண் தேஜ் பைலட்டாகவும், மானுஷி சில்லர் ரேடார் கட்டுப்பாட்டாளராகவும் நடிக்கின்றனர். வரும் டிசம்பர் 8ம் தேதி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இதையடுத்து மானுஷி சில்லர் கோலிவுட்டுக்கு வர முடிவு செய்துள்ளார்.