கொச்சி: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், “என்னுடைய நெருங்கிய தோழி மனீஷா அவர் மூளை கட்டி (பிரைன் டியூமர்) நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது இழப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு சரியாக 21 வயதில் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோயுடன் கடந்த 8 வருடங்களாக அவள் போராட்டம் நடத்தினாள். கடைசியாக அவளை மருத்துவமனையில் சந்தித்தேன். “என்னால் தாங்கவே முடியவில்லை.” அங்கு எதுவும் கூறாமல் வெளியில் வந்து விட்டேன். நீ இறந்துவிட்டாய். ஆனால் உன் நினைவில் நான் அழுதுகொண்டிருக்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் கீர்த்திக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.