சென்னை: ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் எஸ்.கே. செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தப்பு பண்ணினால் தண்டனை ஃபிரீ என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
இயக்குநர் செந்தில் ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்றார். அர்வின் ராஜ் இசை. ஒளிப்பதிவு விக்னேஷ் மலைச்சாமி. நாகராஜன்.டி படத்தொகுப்பு. பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.