ஐதராபாத்: திரைப்படம், வெப்தொடர், விளம்பரம் என்று பிசியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ‘சுபம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை பிரிந்த அவர், தற்போது வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை தீவிரமாக காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘இப்போது நான் வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லை. வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம். முக்கியமாக, ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிகிறது. முன்புபோல் இப்போது நான் வெற்றிபெறவில்லை என்று என்னைச் சுற்றி இருப்பவர்கள் நினைக்கலாம்.
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நான் அதிக வெற்றிபெற்றுள்ளதாக நினைக்கிறேன். தினமும் காலையில் எழுந்து கொள்ளும்போது உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். காரணம், நன் செய்யும் பல்வேறு வேலைகள் எனக்கு அதிக நிம்மதியை தருகின்றன. எனவே, என்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலைப்பட மாட்டேன்.