சென்னை: நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே ‘சின்னதா ஒரு படம்’. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் ‘சின்னதா ஒரு படம்’ ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏபிவி. மாறன் மற்றும் கணேஷ்கே. பாபு (டாடா படத்தின் இயக்குனர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர்.
தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு, திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். ‘அஞ்சாமை’ படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன், நட்சத்திரா மற்றும் சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன் நடித்துள்ளனர்.