அப்பாடா... மகேஷை காதலிப்பதா நியூஸ் வந்துடுச்சு! மகிழ்கிறார் ஆருஸ்ரீ
8/23/2013 11:37:47 AM
‘அழகன் அழகி’யில் அறிமுகமான ஆருஸ்ரீயின் கைகளில் இப்போது ‘அடித்தளம்’, ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற இரண்டு படங்கள். மீடியம் பட்ஜெட் படங்களுக்கு நன்றாக நடிக்கக் கூடிய நடிகை வேண்டுமென்றால் ஆருஸ்ரீயை கைகாட்டுகிற அளவிற்கு இப்போது கோலிவுட்டில் பெயர் தட்டியிருக்கிறார். பெங்களூரு வீட்டில் ஓய்வில் இருந்தவருடன் பேசினோம்.
கன்னடத்துலேருந்து தமிழுக்கு எப்படி வந்தீர்கள்?
ஸ்கூல் படிச்சு முடிச்சதுமே மாடலிங் கேர்ள் ஆயிட்டேன். நிறைய சேலை விளம்பரத்துல நடிச்சேன். கன்னடப் படம் ஒன்றில் விஷ்ணுவர்த்தன் சுஹாசினிக்கு மகளா நடிச்சேன். நெட்டுல என் படத்தை பார்த்துட்டு தமிழ்ல கேட்டாங்க. தமிழ்ல நடிச்சா ஈசியா ஜெயிக்கலாமுன்னு பிரண்ட்சுங்க சொன்னாங்க. சம்மதிச்சு நடிச்சேன்.
‘அழகன் அழகி’ ஃப்ளாப் ஆயிடுச்சே..?
அதாங்க எனக்கும் புரியல. ஒரு வாரம் நான் தூங்கவே இல்லை. கஷ்டப்பட்டு நடிச்ச படம் இப்படி ஆகிடுச்சேன்னு அழுதேன். ‘எல்லா நடிகைக்குமே முதல் படம் அப்படித்தான் இருக்கும். ஹேமமாலினி, அசின், வித்யா பாலன்லாம் தமிழ்ல முதல் படத்துல நடிக்காமலே ரிஜக்ட் ஆனவங்க. அவுங்க பெரிய அளவுல ஜெயிக்கலையா’னு அம்மாதான் ஆதரவா இருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் நார்மலுக்கு வந்து அடுத்த படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் ஒரு நடிகைக்கு முதல் படம் தோல்விங்றது ரொம்ப கொடுமையான விஷயம். அதுல இருந்து மீண்டு வந்து ஜெயிக்கிறதுக்கு கடுமையா உழைக்க வேண்டியதிருக்கும்.
‘அடித்தளம்’ படத்துல நடிக்கிறப்போ ரொம்ப கொடுமைப்படுத்தப்பட்டதா சொல்றாங்களே?
கஷ்டப்பட்டேங்றது உண்மை. ஆனா, யாரும் கொடுமைப்படுத்தலை. ஜெயிக்கணுங்ற வெறில நானே ஏற்றுக் கொண்ட கஷ்டம் அது. பெங்களூருல கஷ்டமே இல்லாம வளர்ந்தவ திடீர்னு கல்லும், மண்ணும் சுமக்கணும், தண்ணீர் தூக்கணுங்ற நிலை வந்தா சிரமமாத்தானே இருக்கும்? இயக்குநரு டூப் போட்டு எடுக்கலாம், டம்மி கல்லு, மண்ணை சுமக்கலாம்னு சொன்னார். நான்தான் ரியலா இருக்கணும்னு நடிச்சேன். இடுப்பு சுளுக்கு வந்து... ஆஸ்பத்திரியில படுத்து... ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.
அதுசரி இப்படி பாவாடை தாவணி, சேலையிலேயே நடிக்கிறீங்களே மார்டன் டிரெஸ், பிகினி டிரெஸ்ல எல்லாம் நடிக்க மாட்டீங்களா?
தமிழ்லதான் அப்படி நடிக்கிறேன். தெலுங்குல ‘பிரெமாண்டே சித்ரம்’னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். அடுத்த மாதம் ரிலீசாகுது. அதுல கிளாமராத்தான் நடிச்சிருக்கேன். தமிழ்லேயும் அப்படி வாய்ப்பு அமையட்டும், ஆருஸ்ரீயா அநியாயஸ்ரீயான்னு மிரண்டு போயிடுவீங்க.
‘அங்காடி தெரு’ மகேசுடன் காதல்னு முதன்முதலா உங்களைப் பற்றி கிசுகிசு வந்திருக்கே?
அப்பாடா... ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ்நாட்டுல கிசுகிசு வந்தாத்தான் பெரிய நடிகையாமே. எனக்கும் வந்ததுல சந்தோஷம். அடுத்தடுத்து ரெண்டு படத்துல ஜோடியா நடிக்கிறதால அப்படி வந்திருக்கும். மகேஷ் என்னோட நல்ல ஃபிரண்ட். காதல் கீதல் எதுவும் கிடையாது. என்னை விட அவன்தான் ஒரு நல்ல பிரேக்கிற்காக கடுமையா உழைக்கிறான். எனக்காவது முதல் படம் பெயிலியர் ஆச்சு. அவன் ஹிட் படத்துல நடிச்சும் போராடுறான். அவன் ஜெயிக்கணும்னு அடிக்கடி பிரார்த்தனை பண்ணுவேன்.
விஜய், அஜீத்துடன் நடிக்கிற ஆசையெல்லாம் இல்லையா?
நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும்னு கனவு இருக்கிற மாதிரி நடிகைங்களுக்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கணுங்ற கனவு இருக்கு. த்ரிஷா, அமலாபால்லாம் சின்ன படங்கள்ல நடிச்சுத்தானே அவங்களுக்கு ஜோடியா நடிக்கிற அளவிற்கு வளர்ந்தாங்க. அப்படி நானும் வளருவேன். எல்லாமே கடவுள் கையில இருக்கு.
‘ஜூனியர் கன்னடத்து பைங்கிளி’னு உங்களை சொல்றாங்களே..?
சரோஜாதேவி மேடம் கடல்னா, நான் பீச்சுல கிடக்கிற மணல். ரெண்டையும் ஒப்பிடவே முடியாது. என்னை வச்சு படம் எடுக்கிறவங்க அவங்க ஆசைக்கு அப்படி போட்டுகிறாங்க. ஆனா, மக்கள் அப்படி சொல்லணும். அதுக்கு தக்கமாதிரி நான் வளர இன்னும் ரொம்ப தூரம் போகணும்.
amoxicillin-rnp
site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret
viagra viagra cena
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
ldn online
open altrexone
low dose naltrexone lung cancer
zygonie.com naltrexone over the counter
alcohol implant treatment
charamin.jp naltrexone prescription