அமலா பால் என் வாய்ப்பை பறித்தாரா? படபடக்கிறார் மகிமா
9/27/2013 12:19:00 PM
‘‘மகிமான்னா மகிமை பொருந்தியவள்னு அர்த்தம். எனக்கு மகிமையை தரப்போறது தமிழ் சினிமாதான். அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்...’’ என்கிறார் மகிமா. ‘சாட்டை’ படத்தில் மாணவியாக வந்து மாணவனை காதலித்தவர், இப்போது ‘மொசக்குட்டி’, ‘என்னமோ நடக்குது’, ‘புரவி 150 சிசி’ படங்களில் நடித்து வருகிறார். ‘திடீர்னு காணாம போயிட்டீங்களே?’ என்றால் அதற்கான காரணத்தை அடுக்குகிறார்.
‘‘‘சாட்டை’யில நடிச்சிட்டிருக்கும்போது பிளஸ்1 படிச்சிட்டிருந்தேன். படம் முடிஞ்சதும் பிளஸ்2ல சேர வேண்டியதாப் போச்சு. அது முக்கியமான வருஷமாச்சே. ஒண்ணும் பண்ண முடியல. பிளஸ்2 எக்ஸாமுக்கு படிச்சிட்டிருந்தப்போ சான்ஸ் வந்துக்கிட்டே இருந்துச்சு. எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு கேட்க முடியல. வேணான்னும் சொல்லமுடியல. அப்படியொரு சிக்சுவேஷன். அம்மாதான் தைரியம் சொல்லி, ‘முதல்ல படிச்சு முடி. எப்பவேணாலும் நடிச்சிக்கலாம்’னு சொன்னாங்க. பிளஸ்2 முடிச்சிட்டு வந்தா சான்ஸ் வரலை. அப்புறம் எல்லோருக்கும் நான் படிச்சு முடிச்சிட்டேன்னு சொன்ன பிறகுதான் வாய்ப்புகள் வந்துச்சு. இப்போ மூணு படம் பண்ணினாலும் பி.ஏ இங்கிலீஸ் லிட்ரேச்சர் படிச்சுட்டுதான் இருக்கேன்...’’ என்றவரிடம் ‘அமலா பால் உங்களுக்கு கிடைச்ச சான்சை பறிச்சுட்டாங்கன்னு ஒரு பரபரப்பை கிளப்பி விட்டிருக்கீங்களே...’ என்றோம். ‘‘விஷயத்தை சொல்றேன். அவங்களால சான்ஸ் மிஸ்சாச்சா இல்லையான்னு நீங்கதான் முடிவு பண்ணிக்கணும்...’’ என்று பீடிகை போட்டவர் தொடர்ந்தார்.
‘‘இயக்குநர் சாமி ‘சிந்து சமவெளி’ படம் எடுக்கிறப்போ எங்க ஊர்பக்கம் லொகேஷன் பார்க்க வந்திருந்தார். அப்போ என்னை பார்த்த அவர், நடிக்கிறியான்னு கேட்டார். ‘சின்ன பொண்ணா இருக்கா. கொஞ்ச நாள் போகட்டும்’னு அம்மா சொன்னாங்க. சிஸ்டர் கேரக்டர்தான் பரவாயில்லைன்னு சொல்லிட்டுப் போனார். நானும் அம்மாவும் சென்னைக்கு வந்தோம். அமலா பால் அந்த படத்தோட ஹீரோயினா புக் ஆயிருந்தாங்க. நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிக்க வேண்டியது. இரண்டு பேரையும் நிக்க வச்சு பார்த்தா அமலா என்னை விட உயரம் குறைவா இருந்தாங்க. அதான் அந்த வாய்ப்பு தவறிப்போச்சு. அப்புறம் ‘அதுல தோழி கேரக்டர் ஒண்ணு இருக்கு. நடிக்கிறீங்களா’னு டைரக்டர் கேட்டார். ‘இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ஹீரோயினாவே நடிக்கிறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிறகு வந்ததுதான் ‘சாட்டை’ வாய்ப்பு...’’ என்ற மகிமாவிடம், ‘அந்தப் படத்துல ஸ்கூல் பையனை லவ் பண்ணுனீங்களே... நிஜத்துல அந்த அனுபவம் உண்டா?’ என்றதும் வெட்கப்பட்டார்.
‘‘நான் யாரையும் லவ் பண்ணல. ஆனா, என்னை நிறைய பசங்க சைட் அடிச்சுக்கிட்டு அலைஞ்சாங்க. எங்கம்மா நான் படிச்ச ஸ்கூல்லேயே டீச்சரா இருந்தாங்க. அதனால யாரும் தைரியமா காதலை சொல்லல. நான் தப்பிச்சேன். அப்புறம் எப்பவுமே நான் ஸ்கூல் காதலுக்கு எதிரி...’’ என்றவரிடம், ‘ஹோம்லியாவே நடிக்கிறீங்க போல...’ என்று இழுத்தோம்.
‘‘அப்படிப்பட்ட சான்ஸ்தான் வருது. ‘மொசக்குட்டி’ல சுட்டியான கிராமத்து பொண்ணு. வளவளன்னு பேசிக்கிட்டு வம்பு வளர்த்துக்கிட்டு அலையற கேரக்டர். ‘என்னமோ நடக்குது’ல நர்ஸ் கேரக்டர். ‘புரவி 150 சிசி’யில சிட்டி பெண். கொஞ்சம் மாடர்ன் டிரஸ் போட்டு நடிக்கிறேன். கிளாமரா நடிக்க மாட்டேன்னு சொல்லலை. கொஞ்ச நாளுக்கு பிறகு கிளாமரா நடிக்கிறது பற்றி யோசிக்கலாம்...’’ என்ற மகிமாவிடம், ‘நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணுமா, கனவு கன்னியாகணுமா’ என்று கேட்டதும் சிறிது நேரம் அமைதியானார்.
‘‘எல்லா விதமான கேரக்டர்லயும் நடிச்சு நல்ல நடிகைன்னு பெயர் வாங்குறது நம்ம கையில இருக்கு. கனவு கன்னியாக்குறது ரசிகர்கள் கையில இருக்கு. நிச்சயமா நல்ல நடிகைன்னு பெயர் வாங்கிடுவேன். அப்புறம் எப்பவும் அம்மாவை துணைக்கு அழைச்சிட்டு வர்றீங்களேன்னு எங்கிட்ட கேட்கிறாங்க. நான் எப்பவுமே அம்மா செல்லம். அவங்க இல்லாம ஒரு நிமிஷம் கூட இருந்ததில்ல...’’ என்றவரிடம், ‘மலையாள நடிகைகள் இங்கு அதிகமா இருக்காங்களே. நீங்க எப்படி ஜெயிக்கப்போறீங்க’ என்றதும், ‘‘அவங்க எல்லோரும் என்னோட சிஸ்டருங்கதானே.. ரொம்ப சிம்பிள். வெயிட் பண்ணுங்க...’’ என்கிறார் மகிமா.
காத்திருப்போம்.
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks
link terminating a pregnancy
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
duphaston cijena bez recepta
duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
printable coupons for cialis
agrisol.com.ar free cialis samples coupon
cialis online coupon
ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
naltrexone for alcohol cravings
link naltrexone pain management
side effects of naltrexone 50 mg
maltrexon what is naltrexone
when to take naltrexone
naltrezone revia side effects
low dose naltrexone lung cancer
zygonie.com naltrexone over the counter