மேக்கப் அலர்ஜி என் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தது! - தன் சோகத்தை பகிர்ந்து கொள்கிறார் ஆத்மியா
11/29/2013 10:49:23 AM
ஒரு வருடமாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும், உடல் எடையை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டியெடுக்க, அமைதியாக இருக்கிறார். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் குரல் தாழ்த்தி பேசத் தொடங்கினார்.
‘‘போன வருஷம் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயின் ஆனேன். பிறகு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனா, ஏத்துக்க முடியாத நிலைமை. காரணம், திடீர்னு மேக்கப் அலர்ஜி ஆயிடுச்சி. முகம் முழுக்க பரு வந்து தொல்லை கொடுத்தது. என்னென்ன ட்ரீட்மென்ட் எடுக்கணுமோ எல்லாத்தையும் எடுத்தாச்சு. எந்த மருந்தும் கைகொடுக்கல. அந்த நேரம் பார்த்து என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போக அவங்களை கவனிச்சுக்க வேண்டியதா போச்சு. இப்ப தேறிட்டாங்க. எனக்கு ட்ரீட்மென்ட், அப்புறம் அம்மாவுக்கு ட்ரீட்மென்ட். இதனால சினிமாவில் கவனம் செலுத்த முடியல. இப்ப ஒரு வருஷ இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வந்திருக்கேன்...’’ என்று நிறுத்திய ஆத்மியாவிடம், நடிகையானது குறித்து கேட்டோம்.
‘‘அப்பா ராஜன், மலையாளத்துல நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கார். சின்ன வயசுல இருந்தே நாடகங்களை பார்த்து பார்த்து, பிற்காலத்துல நானும் நடிகையாகணும்னு ஆசையை வளர்த்துகிட்டேன். அப்பாவோட நண்பர் செவன் ஆர்ட்ஸ் மோகன், என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டு போட்டோ ஆல்பம் கேட்டார். அந்த நேரம் மூணாறு ஏரியாவில் லொகேஷன் பார்க்க வந்த டைரக்டர் எழில்கிட்ட என் போட்டோவை காட்டினார். அதுக்குப் பிறகு ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல என்னை அறிமுகம் பண்ணினாங்க...’’ என்றார்.
‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துல என்ன கேரக்டர்?
கல்லூரி மாணவி கேரக்டர். காதலையும் நேசத்தையும் புதிய கோணத்துல சொல்லும் கதை இது. ‘உண்மையான காதலுக்கு தேவை அன்பு இல்ல, நம்பிக்கை’ங்கற கருத்தை ஆணித்தரமா சொல்ற படம். ஒவ்வொரு சீன்லயும் என்னோட ஆக்ரோஷமான நடிப்பு இருக்கும். ஸ்கிரீன்ல என்னைப் பார்க்கிறப்ப, என்னாலயே நம்ப முடியல. நானா இப்படி நடிச்சிருக்கேன்னு ஆச்சரியமா இருக்கு.
படத்துல நடிக்க நிறைய கண்டிஷன்ஸ் போடறீங்களாமே?
ஆமா. படத்துல நடிக்க ஒப்பந்தமாகறப்பவே என் கண்டிஷன்களை சொல்லிடுவேன். ஹீரோ கூட நெருக்கமான காட்சிகள்ல நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில நடிக்க மாட்டேன், கிளாமர் டிரெஸ் போட மாட்டேன்ங்கற கண்டிஷன்களை ஏத்துக்கிட்டாதான் நடிப்பேன்.
பிகினி டிரெஸ் போடுவீங்களா?
அதான் சொல்லிட்டேனே. என் கொள்கையில இருந்து பின்வாங்க மாட்டேன். நல்ல படங்கள் பண்ணணும், திறமையான நடிகைன்னு பேர் வாங்கணும். இதுதான் என் பாலிசி.
அடுத்து?
தமிழில் ஒரு படம் பண்றேன். புது ஹீரோ. அடுத்த மாசம் ஷூட்டிங் ஆரம்பம். மலையாளத்துல ஒரு படம் ரிலீசாகி இருக்கு.
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
lamisil crema
lamisil lamisil spray
cialis coupons free
achrom.be lilly coupons for cialis
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
side effects of naltrexone 50 mg
click what is naltrexone
when to take naltrexone
click revia side effects
opioid antagonists for alcohol dependence
blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
naltrexone mechanism of action
click low dose naltrexone australia