நயன்தாரா கிரேஸ் இன்னும் குறையல : பிரபாகரன் நச்
1/31/2014 12:06:47 PM
சுந்தரபாண்டியன் ஹிட்டுக்குப் பிறகு படம் பண்ணச் சொல்லி நிறைய நிறுவனங்கள்ல இருந்து அழைப்பு வந்துச்சு. அப்படித்தான் ரெட் ஜெயன்ட்ல இருந்தும் கூப்பிட்டாங்க. எங்க கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்கன்னு உதயநிதி சொன்னார். சரின்னுட்டு ரெண்டு லைன் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. டெவலப் பண்ணுங்க, நானே நடிக்கிறேன்னார். எனக்கு ஆச்சரியம். அப்புறம் அவரை மைன்ட்ல வச்சுட்டே ரெண்டு லைனையும் ஒண்ணாக்கி, கதை பண்ணினேன். சூப்பரா இருக்குன்னு சொன்னார். அதுதான், இது கதிர்வேலன் காதல் என்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
கதிர்வேலன்ங்கற இளைஞரோட காதல்தான் படமா?
ஆமா. சுந்தரபாண்டியன் படத்துல நட்பு முக்கியம்னு சொன்னேன். இதுல காதல் முக்கியம்னு சொல்றேன். ஆனா, காதல்ங்கறது, ஓர் இளம்பெண்ணோட ஓர் இளைஞனுக்கு வர்றது மட்டுமில்லை. அம்மா - அப்பா மேல, சித்தி - சித்தப்பா மேல, மாமா - அத்தை மேல, சகோதரி, சகோதரன் மேலன்னு நாம கொட்டுற பாசமும் காதல்தானே. அதைத்தான் சொல்றேன். தன்னோட குடும்பத்து மேல ஹீரோ வச்சிருக்கிற காதல்தான் படம்.
இதுவும் மதுரை பின்னணி கதைன்னு சொன்னாங்களே?
அப்படித்தான். ஆனா, மதுரை ஸ்லாங்லாம் இருக்காது. அங்க இருக்கிற இளைஞனுக்கு உறவுமுறைகள்ல ஏற்படுற பிரச்னை, காதல், அதுல வரும் சிக்கல்... இதையெல்லாம் எப்படி மீட்டு பிரச்னையை தீர்க்கிறான் அப்படிங்கறதுதான் படம். எந்த மிகைப்படுத்தலும் இல்லாம யதார்த்தமான கமர்சியல் காதல் படமா இது இருக்கும்.
ஒரு கல் ஒரு கண்ணாடியில பார்த்த சந்தானம், சரண்யா, ஹாரிஸ் ஜெயராஜ் இதுலயும்...
அந்தப் பட சாயல் வராதான்னுதானே கேட்கிறீங்க? ஒரு ஷாட் கூட அந்தப் படத்தை ஞாபகப்படுத்தாது. இதுல எல்லாமே புதுசா இருக்கும். சந்தானத்தோட காமெடி, கதையை மீறி இருக்காது. கதையோடு சேர்ந்த காமெடிங்கறதால எல்லோரும் ரசிக்கும்படியா இருக்கும். பாடல்கள், வேற ஃபீல்ல இருக்கும். அதனால ஓகே ஓகே சாயல் இதுல கண்டிப்பா இருக்காது.
உங்களுக்கும் உதயநிதிக்கும் இது இரண்டாவது படம். என்ன வித்தியாசம் இருக்கும்?
வித்தியாசம்னு சொல்ல முடியாது. ஒவ்வொன்னும் அனுபவம்தானே. முதல் படத்துல சின்னச் சின்ன குறைகள் இருக்குன்னு தெரிஞ்சா, அடுத்தப் படத்துல அதை மாத்திக்கணும்னுதான் என்னை போல, எல்லா கலைஞர்களும் நினைப்பாங்க. அதுதான் இதுலயும். ஒரு கல் படத்துல உதய், யதார்த்தமா நடனமாடியிருந்தாலும் அதுபற்றி சின்னதா விமர்சனம் வந்துச்சு. அதைப் போக்குறதுக்காக மெனக்கெட்டு பயிற்சி எடுத்துட்டு இதுல டான்ஸ் பண்ணியிருக்கார். அந்த மாற்றத்தை படத்துல பார்க்கலாம். நடிப்புலயும் அந்தப் படத்தை விட இதுல சிறப்பா பண்ணியிருக்கார். என்னோட சைட்லயும் முதிர்ச்சி தெரியும்.
நயன்தாரா - உதயநிதி ஜோடி எப்படி?
நயன்தாரா எனக்கு சீனியர் நடிகை. ரீ - என்ட்ரியில அவங்களோட கிரேஸ் இன்னும் அதிகமாயிருக்கு. உதயநிதியையும் அவங்களையும் வச்சு போட்டோ ஷூட் பண்ணும்போது, நயன்தாரா மெச்சூர்டா தெரிவாங்களோன்னு சிலர் யோசிச்சாங்க. முதல் ஸ்டில் வெளியானதுமே ரெண்டு பேரும் அப்படி பொருந்தியிருக்கிறதா சொன்னாங்க. விஷுவலாவும் அந்தப் பொருத்தம் இன்னும் அழகா தெரியும். பட ரிலீஸுக்குப் பிறகு காதலர்கள்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லாருமே சொல்வாங்க. வழக்கமா பத்து படம் வந்ததுன்னா, ரெண்டு படத்துலதான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனா, இதுல பவித்ராங்கற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க நயன்தாரா. படத்தோட கதை அவங்களைச் சுற்றிதான் நடக்கும்.
சந்தானம் உங்களை கலாய்ச்சாராமே?
இல்லை. ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் பத்து நாள், நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சந்தானத்துக்கிட்ட சொல்லியிருக்கார் உதய். அப்புறம் அவரை நான் வந்து பார்த்துக்கிறேன்ன்னு சந்தானம் சொன்னாராம். அதேபோல சந்தானம், ஸ்பாட்டுக்கு வந்ததுல இருந்து ஒரே கலாட்டா. பிறகு வேற வழியில்லாம அவங்க கலாய்க்குள்ள நானும் விழுந்துட்டேன். சீரியசா இருந்தவன் சிரிப்பு போலீஸ் மாதிரி நானும் ஜாலியாயிட்டேன்.
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
viagra pret
viagra viagra cena
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
addiyan chuk chuk
addyi addyi fda
duphaston forum
duphaston duphaston i ovulacija
duphaston forum
duphaston duphaston i ovulacija
cialis online coupon
ambito20.it prescription discount coupons
lowdosenaltrexone org
site naltrexone nausea
when to take naltrexone
click revia side effects
when to take naltrexone
naltrezone revia side effects
low dose ldn
open ldn online
naltrexone low dose depression
naltrexone sleep how to get naltrexone out of your system