அரவிந்த் சிவசாமியும் நரசிம்ம ரெட்டியும் அம்பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி
2/7/2014 10:23:38 AM
ரிலீஸுக்கு முன்னாலயே நிமிர்ந்து நில்லுக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. பெர்லின் பட விழாவுக்கு படம் போறதே பெரிய விஷயம்தானே. இந்தப் படத்துக்கு அதுக்கான தகுதி அதிகமாவே இருக்கு நிமிர்ந்து சொல்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. பட விழாவுக்கு படத்தை அனுப்பும் அவசரத்தில் இவரும் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசனும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.
பேட்ச் ஒர்க் முடிஞ்சு காலையிலதான் வந்தோம். அடுத்து ரிலீஸ் வேலை இருக்கு என்ற சமுத்திரக்கனியிடம் படம் பற்றி பேசினால், ஆர்வமாகிவிடுகிறார்.
படம் தொடங்கின 5வது நிமிஷத்துலயே கதைக்குள்ள போயிரு வான் ரசிகன். அட நமக்கும் இப்படி நடந்திருக்கே. நாமளும் இப்படி ஒருத்தனை பார்த்திருக்கோமேன்னு கதை, பார்க்கிறவங்களுக்குள்ளே பதிய ஆரம்பிச்சுடும். பார்க்கிறவங்களும் கதைக்குள்ளே பயணிக்க ஆரம்பிச்சுடுவாங்க. எல்லோருமே தன்னைத் தானே ஹீரோவா நினைச்சு, பார்க்கற மாதிரியான விஷயம் படத்துல இருக்கு. இன்னைக்குத் தேவையான விஷயமா அது இருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி.
தேவையானதுன்னா என்ன மெசேஜ்?
எப்பவும் குறை சொல்லிட்டே இருக்கிறதை விட்டுட்டு நம்மை நாமே சரிபடுத்திக்கிட்டா, உலகம் தன்னால சரியாகும்ங்கறதுதான் மெசேஜ். அதாவது, உன்னை நீ சரி செய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் அப்படின்னு தான் டைட்டில்லயே கேப்ஷன் போடுறோம். படம் பார்க்கிற எல்லோருமே தங்களோட ரிலேட் பண்ணிக்கிற மாதிரியான கதை. படத்துல எல்லாமே புதுசா இருக்கும். இதை நான் சும்மா சொல்லலை. நிஜமாவே அதுக்காக மெனக்கெட்டிருக்கோம். இதுவரை திரையில பார்க்காத விஷயங்கள் இந்தப் படத்துல இருக்கும்.
இரண்டு ஜெயம் ரவி..?
ரெண்டு ரவின்ன உடனேயே, அண்ணன் தம்பியா? ஒருத்தர் ஹீரோ. ஒருத்தர் வில்லனா?ன்னு கேட்கிறாங்க. ஒரு கேரக்டர் அரவிந்த் சிவசாமி. இன்னொருத்தர் நரசிம்ம ரெட்டிங்கற தெலுங்கு ஆள். ஒருவர் நல்லவர்னா, இன்னொருத்தர் ரொம்ப ரொம்ப நல்லவர். இந்த கேரக்டர்களே புதுசா இருக்கும். நாம நல்லவங்களா இருந்தா, முகம் தெரியாத நல்லவங்க நமக்கு உதவிசெய்ய காத்திருக்காங்க அப்படிங்கறதை உணர்த்துற கேரக்டர் ஒருத்தருக்கு. 45 வயசு ஆள் நரசிம்ம ரெட்டி.
ரெட்டியா மாற ஜெயம் ரவி, தன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கார்.
அமலா பால், ராகிணி திவிவேதின்னு ரெண்டு ஹீரோயின்கள்?
அமலா பால், பூமாரிங்கற கேரக்டர்ல வர்றாங்க. ஊர்ல இருந்து சென்னையில செட்டிலான குடும்பம். அவருக்கு டிவின்ஸ் சகோதரிகள். அவங்க பேரு தங்க மாரி, செல்ல மாரி, அம்மா கருமாரி, அப்பா மாரியப்பன்னு, மாரி குடும்பமா இருக்கும். படிச்சுட்டு சும்மா தெனாவட்டா திரியற கேரக்டர். பக்கத்து வீட்டு பெண் மாதிரி, நமக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பொண்ணு மாதிரி தெரிவாங்க. ராகிணி திவிவேதி கன்னடத்துல நிறைய நடிச்சிருக்காங்க. ரெட்டியோட மனைவியா வருவாங்க. சும்மா வந்துட்டு போற கேரக்டரா இல்லாம அவங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கு.
சரத்குமார்?
சிபிஐ அதிகாரியா வர்றார். 25 நிமிஷங்கள்தான். அவர் வர்ற ஒவ்வொரு நிமிடமும் அதிரும். சூரி இதுல காமெடி பண்ணியிருந்தாலும், முக்கியமான கேரக்டர் அவருக்கு. இதுவரை பார்த்த சூரியை இதுல பார்க்க முடியாது. வேற மாதிரி தெரிவார். எப்பவும் ஹீரோயின் கூட அலையற சூரி, காதலுக்கு ஹெல்ப் பண்ற விஷயம் நல்லா இருக்கும். மீடியா நினைச்சா என்ன பண்ணலாம் அப்படிங்கறதையும் சொல்லியிருக்கேன். டி.வி. ஆங்கரா, கோபிநாத் நடிச்சிருக்கார்.
பெங்களூர் ஹைவேஸ்ல ஆக்ஷன் காட்சி எடுத்தீங்களாமே?
பெரிய பைட் அது. நிறைய செலவு பண்ணி எடுத்திருக்கோம். இரண்டு ரவியும் மோதுற அந்த பைட், படத்தோட ஹைலைட்டான விஷயங்கள்ல ஒண்ணா இருக்கும். பட ரிலீஸுக்கு பிறகு கண்டிப்பா அந்தக் காட்சிகள் பேசப்படறதா இருக்கும். ஸ்டன்ட் சிவா மாஸ்டரோட உழைப்பு அதுல தெரியும்.
தெலுங்குல நானி நடிச்சாரே?
ஆமா. அங்க ஜண்டாபாய் கபிராஜூங்கற பெயர்ல ரிலீஸ் ஆகுது. ஜெயம் ரவி கேரக்டர்ல நானி பண்ணியிருக்கார். மற்றபடி ஹீரோயின்கள் தமிழ்ல பண்ணினவங்களே அங்கயும் பண்ணியிருக்காங்க. ரெண்டு மொழியிலயும் ஒரே நாள்ல படம் ரிலீஸ் ஆகும்.
amoxicillin-rnp
link amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
lamisil 1
lamisil lamisil pastillas
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
abortion pill quotes
achrom.be chemical abortion pill
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
when to take naltrexone
naltrezone revia side effects
when to take naltrexone
click revia side effects
naltrexone alcohol
open implant for opiate addiction
trexan medication
naldrexone naltrexone manufacturer
naltrexone injections
site stopping ldn