இப்பதான் சிட்டிக்கு அழைச்சுட்டு வந்திருக்காங்க சசிகுமார் ஜாலி
2/21/2014 10:10:38 AM
என் வாழ்க்கையை ஒட்டிய சில விஷயங்கள் பிரம்மன் கதையில இருந்தது. டைரக்டர் சாக்ரட்டீஸ் கதை சொல்லும்போது, நான் அதுக்குள்ள போறதுக்கு காரணமா இருந்தது அந்த விஷயங்கள்தான். கோவையில இருந்து சென்னை வர்ற இளைஞனோட கதைதான் படம். காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் கலந்ததா இருக்கும்... என்கிறார் சசிகுமார்.
உங்க வாழ்க்கை விஷயங்கள்னா?
கதையில ஹீரோ குடும்பம் தியேட்டர் வச்சிருக்கும். தினமும் படம் பார்க்கிறது மாதிரி அது தொடர்பான விஷயங்கள் எனக்கும் கிடைச்சிருக்கு.
நாங்களும் தியேட்டர் வச்சிருந்தோம். அங்கதான் நான் பாடம் படிச்சதே. அங்கிருந்துதான் எனக்குள்ள சினிமா ஊடுருவிச்சு. அந்த மாதிரியான சம்பவங்களை கதையில கேட்கும்போது எனக்கு அதிக ஈடுபாடு வந்துச்சு. படத்துல சிவாங்கற கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
இதுல மாடர்ன் கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க?
ஏன் நடிக்கக் கூடாதா? நானா மாட்டேன்னு சொன்னேன். சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துட்டு இவன் பரமன்தான்னு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் அதே மாதிரியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் டவுன் கதைகள்ல நடிச்சேன். மதுரை, ராஜபாளையம், தேனி தாண்டி இப்பதான் சென்னைக்கு வந்திருக்கேன். சிட்டிக்கே இப்பதான் அழைச்சுட்டு வந்திருக்காங்க. ஆனா, இயல்பா நான் மாடர்னான ஆள்தான். கான்வென்ட்ல படிச்சவன்னு சொன்னா நம்ப மாட்டேன்கிறாங்க.
கோவை கதைன்னா, அந்த வழக்குல பேசியிருக்கீங்களா?
அந்த அளவுக்குத் தேவைப்படலை. கோவைன்னா ரொம்ப இன்டீரியரா போகலை. இதுல ஆடியன்ஸ் எந்த ஊரையும் கம்பேர் பண்ணி பார்க்கலாம். கோவையில இருந்து சென்னை வந்தப்பறம் இங்கதான் கதை நடக்குது. அதனால ஸ்லாங் தேவைப்படலை.
டான்ஸுக்கு ஸ்பெஷல் பயிற்சி எடுத்தீங்களாமே?
இதுவரை சில படங்கள் டான்ஸ் பண்ணியிருந்தாலும் இன்னும் சிறப்பா பண்ணலாம்னு தோணுச்சு. ராஜூ சுந்தரம் மாஸ்டர்ட்ட கொஞ்ச நாள் பிராக்டீஸ் பண்ணினேன். நல்லா இருந்தது. அவரும் வளைஞ்சு நெளிஞ்சு ஆட வைக்காம சிம்பிளான அதே நேரம் ஸ்டைலான ஸ்டெப்ஸ் கொடுத்து ஆட வச்சிருக்கார். இப்ப அவரும் நானும் நண்பர்களாகிட்டோம். ஆக்ஷன் காட்சிகளை சில்வா பண்ணியிருக்கார். ரொம்ப ரிஸ்க் எடுத்து சில
காட்சிகள் பண்ணியிருக்கேன். இன்னொரு விஷயம் என்னன்னா, இந்தப் படத்துக்காகத்தான் முதன் முதலா வெளிநாடு போயிருக்கேன்.
சுவிட்சர்லாந்துல ரெண்டு பாடலை எடுத்திருக்காங்க. நானும் ஹீரோயின் லாவண்யாவும் ஆடியிருக்கோம்.
சூரி, சந்தானம்னு ரெண்டு காமெடியன்கள்..?
கோவையில சந்தானம், சென்னையில சூரின்னு மாத்தி வச்சிருக்கோம். ரெண்டு பேருமே படத்துல பிரமாதப்படுத்தி இருக்காங்க. கதையோட சேர்ந்த காமெடியா இருக்கும்.
நடிகனுக்காக இயக்குநர்கள் காத்திருக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கீங்களே?
நான் சொன் னது சசிகுமார் என்கிற நடிகனுக்காக, யாரும் காத்திருக்க வேண்டாம்னு. மற்றவங்களை சொல்லலை. ஏன்னா, நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்திருக்கேன். அவங்களோட வலி என்னன்னு எனக்குத் தெரியும். அதனால கதையை கேட்டுட்டு, நான் பண்றேன்னு அவங்களை காக்க வைக்கிறதுல அர்த்தமே இல்லை. நான் எப்பவுமே ஒரு படத்தை முடிச்சுட்டுதான் அடுத்தப் படம் பற்றி யோசிப்பேன். அதனால எனக்காகக் காத்திருக்க வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா, டைரக்டர்கள் பிரம்மா மாதிரி. அவங்க மற்றவங்களுக்காகக் காத்திருக்கக் கூடாது.
அடுத்து நடிப்பா, இயக்கமா?
அப்புறம் பேசுவோமே.
abortion at 16 weeks
link terminating a pregnancy
abortion at 16 weeks
link terminating a pregnancy
cialis cvs coupon
cialis cialis 20mg
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil crema
lamisil lamisil spray
when to take naltrexone
click revia side effects
when to take naltrexone
naltrezone revia side effects
when to take naltrexone
naltrezone revia side effects
naltrexone injections
click stopping ldn