ஆஹா கல்யாணம்
2/27/2014 1:51:01 AM
கல்லூரியில் படிக்கும் நானிக்கு அக்கம் பக்கத்து கல்யாண வீடுகளில் நண்பர்களுடன் அழையா விருந்தாளியாகச் சென்று சாப்பிடுவது வழக்கம். அப்படி ஒரு முறை செல்லும்போது அங்கு திருமண ஏற்பாட்டாளராகப் பயிற்சி பெற்று வரும், வாணி கபூரிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போதைக்கு தப்பித்தாலும் வாணியின் அழகில் மயங்கி, அவர் பின்னால் சுற்றுகிறார். திருமண ஏற்பாட்டு நிறுவனம் ஆரம்பித்து சம்பாதிக்க ஆசை என்கிறார் வாணி. அதில் பார்ட்னராகிறார் நானி. பெரிய இடத்துக்கு வருகிறது நிறுவனம். பிறகு இருவரும் காதலில் விழுகிறார்கள். ஈகோ தலைதூக்குகிறது. பிறகு எப்படி இணைகிறார்கள் என்பது கதை. தெலுங்கு வாசனை அடிக்கும் டயலாக் தவிர மற்றபடி மண்ணின் மைந்தன் தோற்றமும், மேனரிசமும் அப்படியே இருக்கிறது நானியிடம். வாணியிடம் கொஞ்சிக் குலாவுவது, ஈகோவால் நெருப்பாவது, மீண்டும் இணையும்போதும் ஈகோவை மனசுக்குள் வைத்துக்கொள்வது என்று கேரக்டருக்குச் சரியாகப் பொருந்துகிறார் நானி.
வாணி கபூர் நடிப்பிலும், நடனத்திலும் மட்டுமல்ல, தோற்றத்திலும் உயர்ந்து நிற்கிறார். சோகம், கோபம், மகிழ்ச்சி, காதல் என அத்தனை உணர்ச்சிகளையும் நொடியில் மாற்றிக் காட்டி அசத்துகிறார். நானியை நினைத்து அழுது கொண்டிருக்கும்போது ஒரு கஸ்டமர் போன் பண்ண, அவரிடம் சிரித்துப் பேசிவிட்டு அடுத்த நொடியே அழுகையில் வெடிக்கும் அந்த காட்சி, நடிப்புக்கு சாட்சி. கதையின் திருப்பமாக வரும் அந்த முத்தக்காட்சி கூட அவ்வளவு யதார்த்தம். படவா கோபி, பாசிட்டிவான வியாபாரி கேரக்டரிலும், சிம்ரன் நெகட்டிவான பிசினஸ்உமன் கேரக்டரிலும் தங்கள் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் அறியாத முகங்கள். ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் தெரிகிறது.
கல்யாண வீடுகள்தான் கதையின் பின்னணி என்பதால் திருமண விழா எபெக்டிலேயே படம் செல்கிறது. அதை அழகாக படமாக்கி இருக்கிறார் லோகநாதன் ஸ்ரீனிவாசன். தரணியின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. தமிழை தெலுங்கு மாதிரியே பேசுறியேடா என்று நானியையும், நீ ஸ்ருதி சுப்பிரமணியம்தான், ஸ்ருதி ஹாசன் இல்லை என்று வாணியையும் டயலாக்கிலேயே கலாய்ப்பது என ஆங்காங்கே வரும் டைமிங் டயலாக்குகள் படத்துக்குப் பலம். திருமணத்துக்கு முன் நடந்து விடும் அந்த உறவு பற்றி இருவருமே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது இந்திக்கு வேண்டுமானால் சரி.
தமிழில் ஏற்றுக் கொள்வது சிரமம். கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் நேர்த்தியாக இருந்தபோதும் கோடீஸ்வர வீட்டு திருமணங்களில் வடக்கத்திய வாசனை. பாடல் காட்சிகளிலும் இந்தி வாசனை. இதுவே படத்தை அந்நியப்படுத்துகிறது. இது கவனிக்கப்பட்டிருந்தால் ஆஹா கல்யாணம் என்று பாராட்டியிருக்கலாம்.
viagra pret
viagra viagra cena
lamisil crema
lamisil lamisil spray
herbal abortion pill
agama-rc.com information about abortion pill
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
naltrexone for alcohol cravings
open naltrexone pain management
side effects of naltrexone 50 mg
read what is naltrexone
when to take naltrexone
click revia side effects
naltrexone effectiveness
go define naltrexone
naltrexone injections
site stopping ldn
naltrexone low dose depression
open how to get naltrexone out of your system