திரைக்கதையை முழுதாக எழுதி முடித்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?
5/23/2014 12:55:26 PM
சென்ற அத்தியாயத்தில் பார்த்த படி சேர்ந்தோ தனியாகவோ ஒரு திரைக்கதையை இது வரை பார்த்த வழிமுறைகளின்படி எழுதி முடித்தாகிவிட்டது. நமது பல மாத உழைப்பு இதோ நம் கைகளில் தவழ்கிறது. அடுத்ததாக, உடனடியாக ஒரு தயாரிப்பாளரைத் தேடி ஓடாமல் நாம் செய்யவேண்டிய சில வேலை
கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. திரைக்கதை எழுதியதும் முதல் வேலையாக அதனைப் ப்ரின்ட் செய்து கொள்வது அவசியம். அல்லது கையில் எழுதப்பட்டிருந்தால் அதனைத் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஒருவேளை கணினியில் எழுதப்பட்டிருந் தால் அதனை வேறு எங்காவது சேமித்து வைப் பதும் அவசியம். மின்னஞ்சல்களில் வைத்துக் கொள்ளலாம்.
ஹார்ட் டிஸ்க் களில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அல்லது இணையத்தில் சேமிக்கலாம். டிவிடியில் எழுதிக் கொள்ளலாம். மொத்தத்தில் அது டைப் செய்யப்பட்ட லேப்டாப் அல்லது கணினியைத் தவிர வேறு எங்காவது பத்திரமாக இருப்பது நல்லது. எப்போது வேண்டுமானாலும் கணினி பழுதாகலாம் என்பதை மறக்கக்கூடாது. இதன் பின்னர் நமது திரைக்கதை எடுபடுமா எடுபடாதா என்று தெரிந்துகொள்வது அவசியம். ‘எடுபடாத திரைக்கதையை யாராவது இத்தனை கஷ்டப்பட்டு எழுதுவார்களா?’ என்று யாரேனும் கேட்கலாம். ஆனால், நமது மனதில் உள்ள கதை எப்போதுமே நமக்கு நல்ல கதையாகத்தான் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
பிறரின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் நமது கதையை மார்க்கெட் செய்யக்கூடாது. கூடவே, நாம் எழுத ஆரம்பித்த காலத்தில் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட ட்ரெண்ட் இருந்திருக்கலாம். அதை நம்பி நாமும் அதே ட்ரெண்டில் எழுதியிருக்கலாம். அல்லது அந்த ட்ரெண்டே இல்லாமல் முற்றிலும் வேறு ஒரு ட்ரெண்டில் கூட எழுதியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எழுதி முடித்தபின்னர், இத்தனை மாதங்களில் மக்களின் ரசனை எப்படி இருக்கிறது? நமது திரைக்கதை அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா? அல்லது இடைப்பட்ட காலத்தில் அதேபோன்ற படம் ஏதாவது வந்திருக்கிறதா? இல்லை வேற்று மொழிகளில் இதைப்போன்ற சாயல் உடைய படம் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் இனிதான் விடை தேடவேண்டும்.
ஹாலிவுட்டை உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஒரே போன்ற படங்கள் ஒரே சமயத்தில் வெளிவருவது அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி. 1998ல் ‘டீப் இம்பேக்ட்’
(ஞிமீமீஜீ மினீஜீணீநீt) மற்றும் ‘ஆர்ம கெட்டன்’ (கிக்ஷீனீணீரீமீபீபீஷீஸீ) ஆகிய படங்கள் இரண்டு மாத இடை வெளியில் வெளியாகின. அதேபோல் ‘த இல்யூஷ னிஸ்ட்’ (ஜிலீமீ மிறீறீusவீஷீஸீவீst) மற்றும் க்ரிஸ் டோஃபர் நோலனின் ‘த ப்ரஸ்டீஜ்’ (ஜிலீமீ றிக்ஷீமீstவீரீமீ) ஆகிய படங்கள் 2006ல் வெளியாகின.
மிகச் சமீபத்தில், ஹாலிவுட்டில் ஹெர்குலீஸ் மீது திடீர் வெறி உருவாகி, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஹெர்குலீஸ் படம் வெளியாக ( ஜிலீமீ லிமீரீமீஸீபீ ஷீயீ பிமீக்ஷீநீuறீமீs), இதோ ஜூலை 25ம் தேதி கீகீணி புகழ் ராக் நடிக்கும் ‘பிமீக்ஷீநீuறீமீs ’ என்ற படம் வெளியாகிறது.
இது ஹாலிவுட்டில் நடந்தால் பிரச்னையில்லை. காரணம் அங்கே மிகப்பெரிய ஸ்டுடியோக்கள் இந்தப் படங்களின் பின்னே இருப்பதால் எப்படியும் போட்ட பணத்தை எடுத்துவிடுவது சாத்தியம். ஆனால், தமிழில் கஷ்டப்பட்டு எழுதும் திரைக்கதை ஏற்கெனவே வெளியாகிய படத்தைப் போல இருந்தால் அந்தப் படம் எடுக்கப்படாமலேயே போய்விடக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். கூடவே தமிழில் இன்னொரு பிரச்னையும் உண்டு. ஈயடிச்சாங்காப்பி அடிப்பதற்கும் இன்ஸ் பிரேஷ னுக்கும் இன்னும் தெளிவான வித்தியாசம் பலருக்கும் தெரியாத சூழல் நிலவுகிறது. அதனால் நமக்குத் தெரியாம லேயே வேறொரு படம் போல - ஆங்கிலமோ அல்லது உலகப் படமோ அல்லது இந்திய மொழிகளில் வெளியான படமோ - ஒரு காட்சியோ சில காட்சிகளோ இருந்தால் ‘அது ஒரு காப்பி’ என்ற தகவல் மிகவும் எளிதாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் வெளியாகி, அந்தப் படத்தை மிகவும் பாதிக்கக்கூடிய சூழலும் நிலவுகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், காப்பியடிப்பது என்பது கொஞ்சம்கூடப் படைப் பாற்றலே இல்லாமல் அப்படியப் படியே இன்னொரு படத்திலிருந்து வெட்டி வைப்பது; இன்ஸ்பிரேஷன் என்பது ஒரிஜினலுக்குச் செய்யும் மரியாதை. ஒரிஜினலைவிடவும் அற்புதமாகவும் படைப்பாற்றல் மிகுந்ததாகவும் இருக்கும் படைப்பு. இன்ஸ்பிரேஷனால் வெளிப்படும் படைப்புகள் ஒரிஜினலுக்கு இன்னும் மரியாதையையே கூட்டும். இதனால்தான் நாம் எழுதும் திரைக்கதை அல்லது எழுதி முடித்த திரைக்கதை, பிற படங்களைப் போல தோன்றாமல் தனித்துவமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னைவிட இப்போது மிக அதிகம். இதனாலேயே, நமது திரைக்கதை எடுபடுமா என்பதை முதலில் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
நமக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் எப்படியும் சிலர் இருப்பார்கள். நமது வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். இந்த நண்பர்களை அணுகி, நமது திரைக்கதையைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசக் கூடிய நண்பர்களாக அவர்கள் இருப்பது அவசியம். சினிமாக்களை அதிகம் பார்ப்பவர்களாக இருந்தால் இன்னும் நல்லது. திரைக் கதைக்கும் நாவலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர்களுக்கு விளக்கி, திரைக் கதையைக் கொடுத்துப் படிக்கச்சொல்லி, அவர்களின் கருத்தைக் கேட்பது அவசியம்.
பொதுவாகப் பலரும் நமது முகத்துக்கு நேராக எதிர்கருத்து களைச் சொல்லத் தயங்கு வார்கள். அதுதான் மனித இயல்பு. எனவே, முதலிலேயே ‘இதைப் படித்துவிட்டு நீ சொல்லப் போகும் கருத்து எனக்கு மிகவும் முக்கியம். அதனை வைத்துத் தான் என் திரைக் கதையைத் திருத்தப் போகிறேன்’ என்பதை விளக்கி விட்டால் அவர்களால் சுலபமாக உண்மையைச் சொல்லி விட முடியும். உண்மையைச் சொல்லாமல் இருப்பதால்தான் நமக்கு வலி அதிகரிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டுவிட்டால் போதுமானது.
திரைக்கதையில் ஏதேனும் அவசியமான மாற்றங்களை அவர்கள் சொன்னால், அதைச் செய்வது நல்லது. இது நமது திரைக்கதை என்பதால், அவர்கள் அந்த மாற்றத்தைச் சொல்லும்போதே அது எடுபடுமா எடுபடாதா என்பது தன்னிச்சையாகவே நமக்குப் புரியும். அப்படி எடுபடும் என்று தோன்றினால் உடனடியாக அவற்றை மாற்றிவிட வேண்டும்.
இப்படி நண்பர்களிடம் கருத்துக் கேட்டபின்னர் என்ன செய்யவேண்டும்? நீங்கள் ஒருவேளை சினிமாத்துறையில் இருந்தால், திரைக்கதை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் உலகின் சிறந்த திரைக்கதையாளர்கள் பற்றியும் அவர்களின் நுணுக்கங்கள் பற்றியும் நன்றாகத் தெரிந்த சிலர் சினிமாத்துறையில் இருப்பது உங்களுக்குத் தெரியவரும். இப்படிப்பட்ட சிலர் அமைதியாக உதவி இயக்குநர்களாகவோ அல்லது கதைக் குழுவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ இருக்கலாம். திரைக்கதை அமைப்பைப்பற்றி நன்கு தெரிந்த இவர்களின் கருத்தும் மிகவும் முக்கியம். இவர்களின் கருத்து அவசியம் திரைக்கதையை முன்னேற்றும்.
இப்படி எல்லா வகையிலும் நமது திரைக்கதை பற்றிய கருத்துகளைக் கேட்டாயிற்று. அவற்றில் நல்ல கருத்துகளையும் திரைக்கதையில் போட்டுத் திரைக்கதையை மெருகேற்றியாயிற்று. அதன்பின்னர் என்ன செய்யலாம்? தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குப் படையெடுக்கலாமா? இல்லை. அதற்கும் முன்னால் இன்னொன்று இருக்கிறது. அப்படி மாற்றிய திரைக்கதையைக் கடாசிவிட்டு நமக்குப் பிடித்த வேறு வேலைகளைச் செய்வதுதான் அது. இத்தனைகாலம் கஷ்டப்பட்டு எழுதியதை ஏன் கடாச வேண்டும்? அப்படிக் கடாசுவதற்கா இத்தனை மாற்றங் களையும் செய்தோம்? காரணம் இருக்கிறது. எல்லா மாற்றங்களையும் செய்து முழு வடிவத்தை அடைந்த திரைக்கதையைக் குறைந்தபட்சம் ஒருவார காலமாவது நாம் திரும்பிப் படிக்கக்கூடாது. இப்படி ஒரு சிறிய இடைவெளி கொடுத்துவிட்டு மறுபடியும் படித்தால் அவசியம் அது பல எண்ணங்களைக் கிளறும்.
இதுவரை திரைக்கதை எழுதிவந்த காலகட்டத்தில் அந்தக் கதையுடனே நாம் வாழ்ந்ததால் அந்தக் கதையுடன் சம்பந்தப்பட்ட ஒருவித வட்டத்துக்குள்ளேயே நமது மனம் உழன்றுகொண்டிருக்கும். எனவே, சில சமயங்களில் இன்னுமே சில காட்சிகளை சரிப்படுத்த முடியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. இதனால் எல்லாவற்றையும் எழுதி முடித்த பின்னரும் ஓரிரண்டு காட்சிகள் நமது மனதை உறுத்தலாம். இதனால்தான் எல்லாவற்றையும் முடித்த பின்னர் குறைந்தபட்சம் ஒருவார காலமாவது திரைக்கதையின் பக்கமே ஒதுங்கக்கூடாது. அந்தக் காலகட்டத்தில் இத்தனை காலம் நம்மைப் புரிந்துகொண்டு உதவிய மனைவி, குழந்தைகள், காதலி, பெற்றோர் ஆகியவர்களைக் கூட்டிக்கொண்டு எங்காவது சென்று வரலாம்; வீட்டிலேயே இருந்தபடி நன்றாகத் தூங்கலாம்; படங்கள் பார்க்கலாம்; காலாற நடக்கலாம்; நண்பர்களைச் சந்திக்கலாம். நமக்குப் பிடித்தவற்றைச் செய்யவேண்டும் என்பதே நோக்கம்.
அப்படி ஒரு வாரம் கழித்து நமது திரைக்கதையை மறுபடி எடுத்துப் படிக்கும்போது மனம் லேசாகியிருக்கும். திரைக் கதையின் வட்டத்திற்குள்ளிருந்து அவசியம் வெளியேறியிருப் போம். இதனால் முன்னர் யோசிக்கமுடியாத சில காட்சிகளை இப்போது யோசிக்க முடியும். அவற்றை இன்னும் செதுக் கலாம். இப்போது ஒருமுறை நமது திரைக்கதையைப் படித்த பின்னர், மூன்று விஷயங் களைச் செய்ய வேண்டும்.
1.நம்மை இந்தத் திரைக் கதை எழுதத் தூண்டியது எது? கதையா, கதாபாத் திரமா, சம்பவமா அல்லது வேறு ஏதாவது ஒன்றா? மிகவும் வெளிப் படையாக உண்மையை எழுதவேண்டும். ஓரிரு பக்கங்களில் இதை விவரமாக எழுதிக்கொள்ள வேண்டும்.
2. நாம் எந்தவிதமான திரைக் கதையை எழுதி முடித்திருக்கிறோம்? முதலில் எழுத நினைத்தது ஆக்ஷன் படமாக இருக்கலாம். ஆனால், எழுதி முடிக்கையில் அது ஒரு காமெடிப் படமாக மாறியிருக்கலாம். இப்படி, எழுத நினைத்தபோது என்ன நினைத்தோம்? அதை எவ்வாறு முடித்திருக்கிறோம் என்பதை விவரமாக ஓரிரு பக்கங்களில் எழுதிக்கொள்ள வேண்டும்.
3. இப்பொது கடைசியாக, நாம் என்ன எழுத நினைத்தோமோ, அப்படி நமது திரைக்கதை வரவில்லை என்றால், அப்படி அதனை ஆக்க நாம் என்ன செய்யவேண்டும்? இதற்கான வெளிப்படையான பதிலை ஓரிரு பக்கங்களில் எழுதிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று விவரங்களில் தெளிவாக இருப்பது எப்போதும் நல்லது. அப்போதுதான் நமது நோக்கமும் முடிவும் ஒன்றாக இருக்கும். அப்படி இருப்பதுதான் வெற்றிகரமான திரைக்கதைக்கு அடையாளம். அடுத்த வாரம், திரைக்கதையை எழுதி முடித்துவிட்ட பின்னர் செய்ய வேண்டிய இன்னும் சில விஷயங்களை கவனிப்போம்.
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston tablete za odgodu menstruacije
centauricom.com duphaston i ovulacija
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
lowdosenaltrexone org
site naltrexone nausea
naltrexone alcohol
open implant for opiate addiction
naltrexone effectiveness
site define naltrexone
naltrexone injections
click stopping ldn