ஒடுக்கப்பட்ட மக்கள்தான் எக்ஸ் மேன்
5/23/2014 12:58:03 PM
கிழிந்தது கிருஷ்ணகிரி. இந்த உண்மையை இப்போது சொன்னால் உடனடியாக மனநல விடுதியில் சேரச் சொல்லி கடிதம் வரும். சொல்வதற்கில்லை. கல்லெறி பட்டு உடம்பும் புண்ணாகக் கூடும். இதற்கு பயந்து சொல்லாமல் இருந்தாலோ தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறும். என்ன செய்யலாம்? கடமையை நிறைவேற்றலாம். அமெரிக்காவில் நிகழ்ந்த கறுப்பர்களின் போராட்டம்தான் ‘எக்ஸ் மேன்’ கதை உருவாகவே காரணம். இப்படித்தான் அலகு குத்தி தீ மிதித்தபடி திரும்பத் திரும்ப சொல்கிறார் ஸ்டான்லி மார்டின் லீபர். சுருக்கமாக ஸ்டான் லீ. இவர்தான் ‘எக்ஸ் மேன்’ கதாபாத்திரத்தை உருவாக்கியவர். மட்டுமல்ல, ஸ்பைடர் மேன், ஹல்க், ஃபென்டாஸ்டிக் ஃபோர், அயர்ன் மேன், தோர் என பெரும்பாலான சூப்பர் ஹீரோக்களை காமிக்ஸ் உலகுக்கும், ஹாலிவுட் சினிமாவுக்கும் படைத்துக் கொடுத்த பிரம்மா.
தாயகம் அமெரிக்கா. பிறந்தது 1922ல். யூத குடும்பம். 1930களில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை வேடிக்கைப் பார்த்தபடி பால்யத்தை கழித்தார். இதற்கடுத்து இரண்டாம் உலகப் போர். அப்போது டீன் ஏஜ் பருவம். உணவுக்கு வழியில்லை. ஏழ்மையான குடும்பம். பட்டப் படிப்பும் சாத்தியமில்லை. புறச்சூழலும், அகச்சூழலும் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே கனவுலகில் மிதந்தார். காமமும், காதலும் பெருக்கெடுத்த வயதை வறுமையுடன் எதிர்கொண்டார். தீர்க்கதரிசிகளை எதிர்பார்த்து காத்திருப்பது யூதர்களின் வழக்கம். நம்பிக்கை. அது ஸ்டான்லி மார்டின் லீபரின் அடிமனதிலும் வேரூன்றி வளர்ந்திருந்தது. எனவே நிகழும் அனைத்துப் பிரச்னைகளையும், சிக்கல்களையும் தீர்க்க நோவாவை போல் தீர்க்கதரிசியும், தேவகுமாரனும் வருவார் என நம்பினார். காத்திருந்தார். பிற்காலத்தில் அவர் படைத்த அனைத்து கதாபாத்திரங்களிலும் இந்த ‘எதிர்பார்ப்பு’ இழையோடுவதை காணலாம்.
1939ல் ‘டைம்லி காமிக்ஸ்’ நிறுவனத்தில் ஆபீஸ் பாய் ஆக வேலை கிடைத்தது. அப்போது இங்க்கை தொட்டுத் தொட்டுத்தான் எழுதுவார்கள். எனவே அதிகாலை அலுவலகத்தை கூட்டிப் பெருக்கியதும், ஒவ்வொரு டேபிளிலும் இங்கை நிரப்புவது இவர் வேலை. படங்களை வரைந்து வண்ணம் தீட்டியதும் அதில் இருக்கும் பென்சில் கோடுகளை அழிப்பது உப வேலை. வயிற்றுப் பிழைப்புக்காக செய்த இந்த வேலை ஸ்டான்லி மார்டின் லீபருக்கு பிடித்திருந்தது. காமிக்ஸ் கதைகளின் பரம ரசிகரானார். தானும், சித்திரக் கதை எழுத வேண்டும் என்று கனவு கண்டார். அது 1941ல் நிறைவேறியது. ‘கேப்டன் அமெரிக்கா’ காமிக்ஸின் நான்காம் பாகத்தை முதல்முறையாக தனது கற்பனையில் எழுதினார். அத்துடன் இன்று கேப்டன் அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் ‘ஷீல்டை’ அந்தக் கதையில்தான் அறிமுகப்படுத்தினார். விளைவு இன்று கேப்டன் அமெரிக்கா என்றாலே அந்த ஷீல்ட் நினைவுக்கு வரும் அளவுக்கு நிலைத்துவிட்டது.
இந்தக் கதையை தனது ஒரிஜினல் பெயரில் எழுதாமல் ‘ஸ்டான் லீ’ என்ற புனைப் பெயரில் எழுதினார். கடைசியில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இவர் எழுதிய முதல் காமிக்ஸை வாசகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். வெளியான சூட்டோடு பரபரவென விற்றுத் தீர்ந்தது. உடனே பதவி உயர்வு கொடுத்து கதாசிரியராக அமர வைத்தார்கள். மெல்ல மெல்ல ‘டைம்லி காமிக்ஸ்’ நிறுவனத்தின் தூணாக மாறினார். 1960ல் நிறுவனம் கைமாறி ‘மார்வல் காமிக்ஸ்’ என புது வடிவம் கொண்டதும், புது கம்பெனியின் வைஸ் பிரசிடன்ட் ஆக இவர் வளர்ந்ததும் தனிக்கதை. விஷயத்துக்கு வருவோம். ‘எக்ஸ் மேன்’ காமிக்ஸ் கதையாக முதன் முதலில் அச்சானது 1963, செப்டம்பரில். இதற்கான இன்ஸ்பிரேஷன் 1955 முதல் அமெரிக்காவில் நிகழ்ந்து வந்த கறுப்பர்களின் போராட்டம். வாக்குரிமைக்காக அவர்கள் மேற்கொண்ட பயணம், ஸ்டான் லீயை பெருமளவு பாதித்தது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர முடிவு செய்தார். அதை தனது பாணியில் நிறைவேற்றினார்.
‘எக்ஸ் மேன்’ பிறந்த கதை இதுதான். ஆனால், இது சரித்திரத்தில் இடம்பிடிக்க பல காரணங்கள் துணை புரிந்தன. அதில், முதன்மையானது பெண் கதாபாத்திரம்.
யெஸ், உலக காமிக்ஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் கேரக்டர் வலுவாக சூப்பர் ஹீரோ கதைகளில் தோன்றியது இதில்தான். அத்துடன் அமெரிக்காவையே சுற்றிச் சுற்றி வந்த அதி நவீன ஹீரோக்களை ஆப்பிரிக்கர்களாகவும், ஆசியர்களாகவும் மாற்றியதும் ‘எக்ஸ் மேன்’தான். புரியவில்லையா? ஆதியோடு அந்தமாக பார்க்கலாம். எல்லா ‘எக்ஸ் மேன்’ கதைகளிலும் ஏழு பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பார்கள். அதில், டேனி மூன்ஸ்டரும், தன்டர் பேர்டும் அமெரிக்கர்கள். ஜூப்ளியும், லேடி டெத் ஸ்டிரைக்கும் ஆசியர்கள். ஸ்ட்ராம், ஆப்பிரிக்கர். இப்படி அனைத்து கண்டங்களை சேர்ந்தவர்களும் கைகோர்த்துத்தான் தீயவர்களை அழிப்பார்கள். உலகளவில் வாசகர்களை ஈர்க்க இந்த
லைன் போதாதா? விற்பனையில் வீடு கட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டது.
இவையனைத்தையும் விட முக்கியமான ஸ்பெஷல், வீல் சேரில் வலம் வரும் புரொபசர்தான். ‘எக்ஸ் மேன்’ கதைகளில் ‘புரொபசர் எக்ஸ்’ என்று குறிப்பிடப்படுபவர் இவரேதான். இவரால் உருவாக்கப்பட்ட குழுதான் மேலே நாம் பார்த்த அனைத்து கண்டங்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் ‘எக்ஸ் மேன்’ என பொதுப் பெயரில்
அழைக்கப்படும் ஆத்மாக்கள். புரிந்திருக்குமே... அதேதான். உடல் ஊனமுற்றவர்களான மாற்றுத் திறனாளிகளையும் சூப்பர் ஹீரோ அளவுக்கு உயர்த்தியது சாட்சாத்
‘எக்ஸ் மேன்’ கதைகள்தான். இப்படி பிரபஞ்ச அளவில் கல்லாவை நிரப்பத் தேவையான அனைத்து கேரக்டர் ஸ்கெட்சும் ‘எக்ஸ் மேன்’ கதைகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இதனால்தான் சித்திரக் கதைகளாகவும் அவை சக்கைப்போடு போட்டன. சினிமாவாகவும் மாறி வசூலில் பின்னிப் பெடல் எடுக்கின்றன.
சிரிக்காதீர்கள். கதை எல்லாம் விடவில்லை. ஒவ்வொரு ‘எக்ஸ் மேன்’ படமும் நிகழ்த்திய வசூல் சாதனையை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்து பாருங்கள். உண்மை பளிச்சிடும்.
எல்லாம் சரி... மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் ‘எக்ஸ் மேன்’களுக்கும் என்ன வித்தியாசம்?ஒன்றே ஒன்றுதான். அது, ‘எக்ஸ் மேன்’ எனப்படுபவர்கள் மியூட்டன்ஸ் (விutணீஸீts). அவ்வளவுதான். அதென்ன மியூட்டன்ஸ்?ஸ்பைடர் மேன், ஹல்க், அப்சார்பிங் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர் ஆகிய மார்வெல் காமிக்ஸின் கதாநாயகர்கள் புறத்தூண்டுதல்களாலும், வேறு ஆற்றல்கள் தாக்கியதாலும் சூப்பர் ஹீரோக்களாக மாறியவர்கள். ஒரே வரியில் சொல்வதென்றால் இயல்பிலேயே அவர்கள் அதிக சக்தி வாய்ந்த கதாநாயகர்கள் அல்ல. ‘விபத்து’ காரணமாக அப்படி மாறியவர்கள். ஆனாலும் நல்லவர்கள்.மியூட்டன்ஸ் அப்படியில்லை. பிறப்பிலேயே அவர்கள் சூப்பர் ஹீரோக்கள்தான். காரணம், அவர்களது மரபணு - டிஎன்ஏ அப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
இன்னொரு விஷயம். அனைத்து ‘எக்ஸ் மேன்’ கதைகளிலும், படங்களிலும் வில்லனும் மியூட்டன்ஸ்தான். மொத்தத்தில் ‘நல்ல’ - ‘கெட்ட’ மியூட்டன்ஸ்களுக்கு இடையிலான சண்டைதான் அடிநாதம்.இப்படித்தான் இதுவரை ஆறு ‘எக்ஸ் மேன்’ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படித்தான் ஏழாவதாக இன்று வெளியாகும், ‘எக்ஸ் மேன் - டேஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட்’ (ஙீவிமீஸீ: ஞிணீஹ்s ஷீயீ திutuக்ஷீமீ றிணீst) படத்தின் சரடும் அமைந்திருக்கிறது.2023ல் ஒரு விபரீதம் நடக்கப் போகிறது. இதற்கு காரணம், 1973ல் மிஸ்டிக் என்பவன் பொலிவர் டிராஸ்க்கை கொன்றது. இதனால் ஏற்பட்ட விளைவுதான் 2023ல் எதிரொலிக்கப் போகிறது.இதைத் தடுக்க வேண்டுமென்றால், 1973ல் அந்தக் கொலை நிகழாமல் தடுக்க வேண்டும். இதற்காக கடந்த காலத்துக்கு ‘எக்ஸ் மேன்’ செல்கிறான். கொலை நிகழாமல் தடுக்கிறான்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், பிரையான் சிங்கர் ( ஙிக்ஷீஹ்ணீஸீ ஷிவீஸீரீமீக்ஷீ ). ‘த யூஷ்வல் சஸ்பெக்ட்ஸ்’, ‘சூப்பர்மேன் ரிட்டன்ஸ்’ ஆகிய ப்ளாக் பஸ்டர் படங்களை இதற்கு முன் இவர் டைரக்ட் செய்திருக்கிறார். அத்துடன் இரு ‘எக்ஸ் மேன்’ படங்களையும் கடந்த காலத்தில் இயக்கியிருக்கிறார். ஸோ, இந்த ‘எக்ஸ் மேன்’ இவர் கணக்கில் மூன்றாவது.ஒருவகையில் 2006ல் வெளிவந்த ‘எக்ஸ் மேன் - த லாஸ்ட் ஸ்டாண்ட்’, 2011ல் ரிலீசான ‘எக்ஸ் மேன்: ஃபர்ஸ்ட் க்ளாஸ்’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாகவும் இதைச் சொல்லலாம்.கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கிடைக்கும் விடை ஒன்றே ஒன்றுதான்.
இந்தப் படமும் கல்லாவை அடித்து நொறுக்கப் போகிறது. ஏனெனில், கறுப்பர்கள்தான் அமெரிக்காவை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையும் வாழ வைக்கிறார்கள்.
யெஸ், நிஜமான மியூட்டன்ஸ் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். ‘எக்ஸ் மேன்’ சாதனைகள் அதைத்தான் உணர்த்துகின்றன. உணர்த்தவும் போகின்றன. கறுப்பின மக்களின் சுதந்திரத்துக்காக இறுதி வரை போராடிய மால்கம் எக்ஸ், இப்படித்தான் தன்னையும் அறியாமல் ஹாலிவுட்டை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்...
amoxicillin-rnp
click amoxicillin endikasyonlar
coupons for prescriptions
klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami
abcomke.sk abortion research paper
lamisil 1
lamisil lamisil pastillas
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
free cialis coupons
acnc.com coupon prescription
cialis online coupon
ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach
gamefarm.se 12 weeks abortion
lowdosenaltrexone org
site naltrexone nausea
ldn online
open altrexone
where to get naltrexone implant
site stopping ldn
nalprexon
link side effects of revia
opioid antagonists for alcohol dependence
blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
vivitrol shot information
open naltrexone other names