ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா, அங்கே மாதத்துக்கு ஒரு காதலரை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார் என்று சூடாக குற்றம் சாட்டியிருக்கிறார் ராக்கி சாவந்த். கஹானி-2 படத்துக்கு விமர்சனமெல்லாம் நல்லபடியாகக் கிடைத்தும், பாக்ஸ் ஆபீஸில் படம் படுத்துவிட்டதால் செமையாக அப்செட் ஆகியிருக்கிறார் வித்யாபாலன்.கங்கனா ரணாவத்தின் சம்பளம் இப்போது படத்துக்கு பதினைந்து கோடியாம். வரலாறு காணாத விதத்தில் ஒரு நடிகைக்கு உச்சபட்ச சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக சக நடிகைகள் காண்டு அடைந்திருக்கிறார்களாம். பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோக்களும், தங்களுக்கு இணையாக கங்கனா முன்னேறுவதைக் கண்டு கடுப்பாகியிருக்கிறார்கள்.சோனம் கபூர் வாரத்துக்கு ஒரு தடாலடி ஸ்டேட்மென்ட் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஸ்டார் வாரிசாக இருந்தும் கூட என்னையும் சில ஹீரோக்கள் அதற்கு அழைக்கிறார்கள் என்று லேட்டஸ்டாக இவர் போட்டிருக்கும் குண்டு, சோனுவின் அப்பா அனில்கபூரையே அதிர வைத்திருக்கிறதாம்.வஜா தும்ஹோ படத்தில் மஜாவான ரோலில் நடித்திருக்கிறார் சனாகான். சன்னி லியோனுக்காக எழுதப்பட்ட இந்த மஜா ரோலை, டைரக்டரை தாஜா பண்ணி வாங்கினாராம் சனா.