சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார். விஜய் ஆண்டனி தற்போது ‘அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்’ உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நேற்று மதுரையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.இந்த விழாவிற்கு பிறகு விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாகவே உள்ளது. இந்த கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம். புகைபிடிப்பதும் ஒருவகை போதைப்பழக்கமே. அதன் அடுத்தகட்ட பரிணாம போதைபழக்கமே தற்போது வெளிவரும் விஷயங்கள் எல்லம். அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்ப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் போலீஸ் விசாரணையில் உள்ளதால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா..? இல்லையா..? என்பது தெரியாது. எனவே அதுகுறித்து பேச ஒன்றுமில்லை என விஜய் ஆண்டனி கூறினார்.