வடசென்னை ஏரியாவிலுள்ள சத்யா நகரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி. அவர்களுக்கு மிகவும் ெநருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம் சிவா, வினோதினி வைத்தியநாதன் தம்பதி மற்றும் பிரசன்னா பாலசந்திரன், ஆர்.மோகனா தம்பதி. மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வசித்து வரும் நிலையில், எம்எல்ஏ சரத் லோகித்தஸ்வா மறைத்து வைத்திருந்த 5 கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது.
அது யாருக்குக் கிடைத்தது? என்ன ஆனது என்பதே மீதி கதை. தேவையற்ற பெரும் பணம் தானாகவே கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மைதீன். ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி ஜோடி யதார்த்தம். கணவர் சுப்பிரமணியம் சிவாவின் குடிப்பழக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவியாக வரும் வினோதினி வைத்தியநாதன் நடிப்பு சிறப்பு. பிரசன்னா பாலசந்திரன், தயாரிப்பாளர் ஆர்.மோகனா ஜோடியும் கவனிக்க வைக்கிறது.
வழக்கமான உறுமல் எம்எல்ஏ சரத் லோகித்தஸ்வா, அவரது அடியாள் விஜய் சத்யா ‘அருவி’ மதன் ஆகியோரின் நடிப்பும் யதார்த்தமாக இருக்கிறது. தில்ராஜுவின் ஒளிப்பதிவு, ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை, எஸ்.பாஸ்கரின் எடிட்டிங், டி.ஜெயசீலனின் அரங்க அமைப்பு, மெட்ரோ மகேஷின் சண்டைக்காட்சி படத்துக்கு பலமாக அமைந்துள்ளன. கிளைமாக்சை முன்பே கணிக்க முடிவது மைனஸ்.
