Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கயாடு லோஹருக்கு பியானோவை பரிசளித்த தமன்

சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், பஹத் பாசில், மாளவிகா மோகனன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘இதயம் முரளி’. தமன் இசை அமைத்து நடித்தார். இப்படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற கயாடு லோஹர் முதல்முறை தமிழில் பேசினார்.

அது வருமாறு:

நான் கையெழுத்திட்ட முதல் தமிழ் படம் ‘இதயம் முரளி’ என்பதால், இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று சொல்வேன். ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அன்பு மற்றும் பாராட்டுகள் மிகப்பெரியது. இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அமுதா கேரக்டர் என் மனதுக்கு மிகவும் நெருக்கம். அவளின் இன்னசென்ட், தைரி யம், எமோஷன் எல்லாமே எனக்கு நன்கு பிடிக்கும். ஆகாஷ் பாஸ்கரன் என்னிடம் கதை சொல்லும்போது, பிரீத்தி முகுந்தன் கேரக்டரிலும் என்னையே நடிக்க சொன்னார். அதுபோல், பீரீத்தி முகுந்தனும் நான் நடித்த அமுதா கேரக்டருக்கு லுக் டெஸ்ட்டை செய்தார்.

இறுதியில் அது சரியாக அமைந்தது. நான் அமுதாவாக நடித்தபோது, எல்லோரும் எனக்குள் இருந்த பெர்ஃபார்மரை பார்த்தனர். இசை ஒன்றே இந்தபடத்தை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. நான் ஒட்டுமொத்த ஆல்பத்துக்கும் தீவிர ரசிகையாகி விட்டேன். இது 2000ம் காலக்கட்டத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. தமன் எனக்கு பியானோ ஒன்றை பரிசளித்தார். அது எனக்கு நிஜமாகவே உதவுகிறது. சினிமாவில் எனக்கு கிடைத்த நெருங்கிய ஒரே தோழி, பிரீத்தி முகுந்தன்.