Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

8 மணி நேர வேலை சினிமாவுக்கு ஒத்துவராது: பிரீத்தி முகுந்தன் பளிச்

சென்னை: அசோக் செல்வன் ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் திரைக்கு வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்வில் பங்கேற்ற பிரீத்தி முகுந்தன் கூறியது: பிளாஸ்ட் படமாகட்டும், அன்பில் அவன் படமாகட்டும். இரண்டிலுமே எனது கேரக்டர் மிக வலுவாக அமைந்துள்ளது. இரு படங்களிலுமே ஹீரோவுக்கு இணையாக கதை என்னைச்சுற்றி பயணிக்கும். வலுவான கேரக்டர். அந்த படங்களை ஒரு ஷோல்டரில் ஹீரோ தாங்கினால் மறு ஷோல்டரில் நான் தாங்குவேன்.

அதே சமயம், இத்தகைய படங்களால் நான் ஒருவித பிரஷருக்கு ஆளாவேனா என கேட்கிறீர்கள். அந்த கேரக்டரை திறம்பட செய்ய வேண்டும் என பிரஷர் மட்டுமே எனக்கு இருக்கும். அது இருந்தால்தான் சிறப்பாகவும் நடிக்க முடியும். மற்றபடி வெள்ளிக்கிழமையன்று படம் வெளியாகும்போது எனக்கு எந்த பிரஷரும் இருக்காது. படத்தின் ரிசல்ட் பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். அதை மக்களின் கையில் விட்டு விடுவேன்.

8 மணி நேர வேலையை பற்றி சில ஹீரோயின்கள் பேசியிருப்பது உண்மைதான். என்னை பொருத்தவரை சினிமாவில் அது நடைமுறை சாத்தியமில்லை. நடிகர்கள், முக்கிய டெக்‌னீஷியன்கள், தொழிலாளர்கள், நேரம் பார்க்காமல் உழைக்கும்போது, நான் மட்டுமே 8 மணி நேரம்தான் வேலை செய்வேன் என்றோ இந்த நேரம் வரைதான் பணியாற்றுவேன் என்றோ சொல்ல மாட்டேன். அதே நேரம், சில ஹீரோயின்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் சூழ்நிலை, அவர்களின் உடல்நிலை ஆகியவை காரணமாக இருக்கலாம். அதனால் அவர்களை நான் தவறாக சொல்ல மாட்டேன்.

எனக்கும் கயாடு லோஹருக்கும் இடையே போட்டியா என கேட்கிறீர்கள். சிலர் மமிதா பைஜுவுடன் போட்டியா என கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு போட்டியில்லை. கயாடு, மமிதா இருவருமே எனக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கிறேன். இவ்வாறு பிரீத்தி முகுந்தன் கூறினார்.