தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

96 ஜானு இமேஜை மாற்ற வேண்டும்: கவுரி கிஷன் ஆர்வம்

சென்னை: கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரிக்க, அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான ‘அதர்ஸ்’, வரும் 7ம் தேதி திரைக்கு வருகிறது. ஆதித்யா மாதவன் ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக கவுரி கிஷன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெராடி, மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். படம் குறித்து கவுரி கிஷன் கூறியதாவது:

ஆதித்யா மாதவனை புதுமுகம் என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நான் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளேன். ஆதித்யா மாதவன் பேசும்போது, என்னை அக்கா என்று சொன்னார். அவருக்கு வயது 22. அதனால் இப்படி சொல்லியிருக்கலாம். ஆனால், படத்தில் அவரும், நானும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளோம். இன்னும் என்னை ‘96’ படத்தின் ஜானுவாகவே பார்க்கின்றனர். அது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த கேரக்டரை தாண்டி இன்னொரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.