Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

99/66 விமர்சனம்...

அடுக்குமாடி குடியிருப்பில், 66ம் நம்பர் பிளாட்டில் ரச்சிதா மகாலட்சுமி, சபரி தம்பதி குடியேறுகின்றனர். 99ம் பிளாட்டில் ஸ்வேதா வசிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு சங்க தலைவர் எம்.எஸ்.மூர்த்தியை இரவில் ஆந்தை ஒன்று தடுத்து நிறுத்துகிறது. பணத்துக்காக ரச்சிதா மகாலட்சுமியை கொல்ல சபரி முயற்சிக்கிறார். இந்நிலையில், ஸ்வேதாவை தனது கணவர் கொல்வதை உணர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அதிர்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

ரச்சிதா மகாலட்சுமி இயல்பாக நடித்துள்ளார். புத்த மத ஈர்ப்பை ஸ்வேதா நன்கு வெளிப்படுத்துகிறார். சபரி, ரோகிந்த் புதுமுகங்கள் மாதிரி தெரியவில்லை. சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), முல்லை கோதண்டம் காமெடி ஓ.கே ரகம். பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன், புஜ்ஜி பாபு, அம்பானி சங்கர் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.

சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. அமர்கீத் பின்னணி இசை பயமுறுத்துகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பாடல்களுக்கு இசை அமைத்து இயக்கி தயாரித்துள்ள எம்.எஸ்.மூர்த்தி, திகில் கதையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை சொல்லி, அந்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பல காட்சிகளில் அழுத்தம் இல்லை.