Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருமணம் இல்லாத உறவே பெஸ்ட்: சொல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை, மார்ச் 19: ‘ஜகமே தந்திரம்’, ‘ஆக்‌ஷன்’, ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘மாமன்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. திருமணம் செய்யாத உறவுதான் நல்லது என இவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

இது குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, ‘‘திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. திருமண பந்தத்தில் இரண்டு பேர் சேர்ந்து வாழும்போது, நிம்மதியே இல்லாத நிலை வரும். அதே சமயம், ஆண், பெண் இருவருக்குமே துணை தேவைதான். அதற்கு திருமணம் இல்லாத உறவே நல்லது’’ என்றார். இதற்கு முன் ஸ்ருதி ஹாசனும் இதே கருத்தை பற்றி பேசியிருந்தார்.