Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆட்டி விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன், செங்காடு மலைப்பகுதிக்கு டிரான்ஸ்பராகி வருகிறார். அங்கு வசித்து வரும் மக்களுக்கு இடையே நடக்கும் சில குற்றங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஓரளவு படித்த அபி நட்சத்திரா, அங்குள்ள சிறுவர், சிறுமியருக்கு கல்வி போதித்து வருகிறார். இந்நிலையில் அங்கு வரும் ஆசிரியர் உள்பட பலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அதை இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை.

அற்புதமான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கும் அபி நட்சத்திரா, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இசக்கி கார்வண்ணன், தூங்கி வழியும் போலீஸ் கான்ஸ்டபிள் ‘காதல்’ சுகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்கள். மற்றும் போஸ்ட்மேன் சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி, கரண் சக்ரவர்த்தி, ஆலன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சவுந்தரராஜன், நேசன், குயிலி நாச்சியார், உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா, மறைந்த செல்வகுமார் ஆகியோர் கதையை நகர்த்த உதவும் கேரக்டர்கள். அனைவரும் கேரக்டருக்கேற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

மர்மமான காட்டில் நடக்கும் சம்பவங்களை கண்முன் காட்டி அசத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம். தீசன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. ஆர்ட் டைரக்டர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது. பெண்களின் பாதுகாப்பு, கல்வி, வீரம் மற்றும் பெண்ணுரிமை பேசும் சமூக அக்கறையுடன் கூடிய படத்தை தி.கிட்டு எழுதி இயக்கியுள்ளார். 2ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளனர்.