Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் கடந்த 26ம் தேதி உதய்பூரில் நடந்தது. பிறகு அவர்கள் தங்கள் திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதை அவர்களது ரசிகர்கள் வைரலாக்கினர். ராஷ்மிகா மந்தனாவின் திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் பதிவு படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த 2024ல் உலக கோப்பை வெற்றிக்கு பிறகு விராட் கோஹ்லி வெளியிட்ட பதிவு 23 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் திருமண பதிவு 26 மில்லியன் லைக்குகளை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டிருந்த ரீல்ஸ், 51 மில்லியன் லைக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவின் திருமண பதிவு அதிக லைக்குகளை பெற்றுள்ளது.