Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிக்க வாய்ப்பு வந்தாலும் பாடலுக்குதான் முக்கியத்துவம்: சிந்து வாசுதேவன்

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, ராஜஸ்தானி உள்பட 16 மொழிகளில் சுயாதீன பாடல்கள் பாடி பிரபலமானவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சிந்து வாசுதேவன் (22). தற்போது தென்னிந்திய மொழி படங்களில் பாடுவதற்காக சென்னைக்கு வந்திருக்கும் அவர் கூறியதாவது:  அமெரிக்காவில் சுயாதீன பாடல்களும், பாடகர்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. தற்போத இந்தியாவிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

நான் ஸ்ரேயா கோஷல், விஜய் யேசுதாஸ் உள்பட பலருடன் பாடியிருக்கிறேன். இளம் தலைமுறையினர் அதிக திறமையுடன் இசைத்துறைக்கு வருகின்றனர். அவர்களை இசை அமைப்பாளர்களும், திரைத்துறையினரும் உற்சாகப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் உதவி செய்தாலும், அதில் மனித உணர்வுகளை துல்லியமாக எதிர்பார்க்க முடியாது. எப்போதுமே குரல்வழி பாடல்தான் சிறந்தது. பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகிகள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

ஹூஸ்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை சந்தித்தேன். எனது குரல் பொருத்தமாக இருந்தால், தமிழ் படத்தில் பாட வாய்ப்பு தருவார் என்று நம்புகிறேன். இமான், ஷான் ரோல்டன் இசையில் தமிழ் பாடல்களை பாடியிருக்கிறேன். என்னை பார்ப்பவர்கள், தேசிய விருது பெற்ற நித்யா மேனன் சாயலில் இருப்பதாக சொல்கிறார்கள். மகிழ்ச்சி. எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தாலும், பாடலுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவேன்.