Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆக்‌ஷன் கதை டிஸ்கோ

சென்னை: ‘அஞ்சக்கள்ளகோக்கன்’ மலையாள படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டிஸ்கோ’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகு, பிரபல நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. ஆண்டனி வர்கீஸுடன் இணைந்து தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர்கள் அனைவரும் கருப்பு உடையில் கையில் துப்பாக்கிகளுடன் காட்சிளிக்கின்றனர். டைட்டில் லோகோவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி குறியீடு, இது ஒரு மிகச்சிறந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் கன்-ஃபைட் என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. வருகிற நவம்பர் 6-ம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.