Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏ.ஐ மூலம் நடிகைகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

எக்ஸ் தளம் அதன் பயனாளர்களுக்காக கிரோக் (GROK) என்ற ஏஐ ஆப்ஷனை கொடுத்துள்ளது. இதன்மூலம் தங்களுக்கு தேவையான பல விஷயங்களை நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இது பலருக்கு உதவியாக இருந்தாலும், சிலர் இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்துகின்றனர். தற்போது இணையத்தில் நடிகர், நடிகைகளின் ஃபேக் போட்டோக்கள், ஏஐ போட்டோக்கள் பரவி வருகிறது. அதற்கு உதவியாக இருப்பதும் இதுபோன்ற ஏஐ தொழில்நுட்பம்தான். சில இணையவாசிகள் கிரோக்கிடம், நடிகைகளை பிகினி உடையில் மாற்று என்றும்; பெண்களை கவர்ச்சியான உடையில் மாற்றிக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்க தொடங்கிவிட்டனர்.

இதற்கு பல நடிகைகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால், கிரோக் மூலம் இனி பிகினி உடைக்கு நடிகைகளை மாற்ற முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், ஆபாச வீடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து அந்நிறுவனம் நீக்கியது. ஆனால், பல நெட்டிசன்கள் டிரெஸ் ஸ்வாப் அல்லது பொசிஷன் சேஞ்ச் ஆப்ஷனை பயன்படுத்தி, நடிகைகளின் ஆபாசமான போட்டோக்களை பரப்பி வருகின்றனர். மேலும், பொசிஷன் சேஞ்ச் என்ற ஆப்ஷன் மூலம் நடிகைகளின் போட்டோக்களை ஆபாசமான ஆங்கிளில் மாற்றி, அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் நடிகைகளுக்கு அடுத்த தலைவலி ஏற்பட்டுள்ளது.