Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐ மூலம் ஆபாச வீடியோவை சித்தரிப்பதா? மோசடி பேர்வழிகளுக்கு ரித்திகா எச்சரிக்கை

சென்னை: தனது பெயரில் பேஸ்​புக்​கில் போலியாக ஒரு கணக்​கு தொடங்கி, பணம் வசூலித்து மோசடி செய்​து​  வரு​வ​தாக ரித்​திகா சிங் எச்​சரித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​ட வீடியோவில், ‘இன்ஸ்டாகிராமில் இருக்கும் எனது அதி​காரப்​பூர்​வ கணக்கில், அனைத்து விஷயங்​களை​யும் நானே நேரடி​யாக பகிர்​கிறேன். ஆனால், பேஸ்​புக்​கில் எனது பெயரில் ஒரு பக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அவர்​கள் மாதம் ரூ.400 கட்​ட​ணத்​தில் சப்​ஸ்கி​ரிப்​ஷன் முறையை நடத்தி வரு​கின்​றனர். மக்​களும் அதற்​காக பணம் செலுத்தி வரு​கின்​றனர். அது என்னை மிகவும் அவ​மதிக்​கும் அளவுக்​கு சென்​றுள்​ளது. அதில் என்​னைப்போல் தோற்​றமளிக்​கும் ஏஐ வீடியோக்​கள் பரப்​பப்​படுகின்​றன. ஏஐ தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்சி நம்ப முடி​யாத அளவுக்கு ஆபத்​தானதாக மாறி​விட்​டது. தனிப்​பட்ட ஒரு​வரின் நற்​பெயரை கெடுக்​கும் வகை​யி​லான பல்வேறு வீடியோக்​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன.

எனது குடும்​பத்​தினரோ அல்​லது நண்​பர்​களோ பார்த்​தால் கூட, அது நான் இல்லை என்​பதை அவர்​களால் கண்​டு​பிடிக்க முடி​யாத நிலை ஏற்படும். இதுபோன்ற உண்​மை​களை வெளிப்​படுத்​துவதற்காகவே இந்த வீடியோவை நான் வெளியிட்டுள்​ளேன். இதுபோன்ற பக்​கங்​கள் உங்​கள் கவனத்​துக்கு வந்​தால், தய​வுசெய்து அதை நம்ப வேண்​டாம். சப்​ஸ்கி​ரிப்​ஷன் செய்ய வேண்​டாம். தய​வுசெய்து அந்​த பக்​கம் குறித்து புகார் அளித்து, அதை உடனே அகற்ற உதவுங்​கள்’ என்று பேசியுள்​ளார்.