Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏவுகணை தாக்குதலால் விமானம் திடீர் மாற்றம்; அமிஷா படேல் நடுவானில் தவிப்பு

மும்பை: பாலிவுட் நடிகை அமிஷா படேல், கடந்த 2003ல் தமிழில் விஜய்யுடன் இணைந்து ‘புதிய கீதை’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி அமிஷா படேல் நியூயார்க்கில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக மும்பைக்கு பயணித்தார். அவருடன் பாலிவுட் தயாரிப்பாளர் குணால் கூமர், டிஜே சேதஸ் ஆகியோரும் பயணித்தனர். விமானம் துபாயில் தரையிறங்க தயாரான நிலையில், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே நடந்து வரும் போர் பதற்றம் காரணமாக, திடீரென்று வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு கருதி அமீரக வான்வெளி மூடப்பட்டதால், அமிஷா படேல் பயணித்த விமானம் ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், 24 மணி நேரத்துக்கும் மேலாக மஸ்கட் விமான நிலையத்திலேயே அவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமிஷா படேல், ‘துபாயில் தரையிறங்க இருந்தபோது, ஏவுகணை தாக்குதலால் வான்வெளி மூடப்பட்டு, உடனே மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டோம். இந்த போர் எப்போது முடிவுக்கு வரும்?’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ேநற்று முன்தினம் அவர் மும்பைக்கு திரும்பினார்.