Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பச்சன் பெயரை நீக்கினார் ஐஸ்வர்யா ராய்

துபாய்: மகள் பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சமீப காலமாக ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை பிரிந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. ஆனால் சில இடங்களில் இதை மறுப்பு தெரிவித்து ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் தனித்தனியாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் பெயர் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது. மேலும், அதில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளோடு கலந்து கொண்டுள்ளார். அதன்பின், அபிஷேக் பச்சன் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவோடு அந்த நிகழ்ச்சியில் தனியாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பெயரை பதிவு செய்யும்போது, அதை சம்பந்தப்பட்டவர் விண்ணப்பத்தில் எழுதி தர வேண்டும். ஐஸ்வர்யா அப்போது பச்சன் என்ற தனது கடைசி பெயரை நீக்கிவிட்டு எழுதியுள்ளதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.